வலைவாசல்:மின்னணுவியல்/மேற்கோள்/அக்டோபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின்சக்தி பாவிக்கப்படும் அல்லது ஓடும் வேக விகிதம் மின்திறன் ஆகும்; அதாவது மின்திறன் = மின்சத்தி / நேரம். மின்னாற்றல் என்பது ஒரு மின்சுற்றில் சுழலும் மின்சக்தியின் வீதம் ஆகும். ஒரு மின்சாரம் மின்சுற்றில் சுழலும் பொழுது , அது இயற்வினை செய்வதற்கான ஆற்றலை தருகிறது . அந்த ஆற்றலையே மின்னாற்றல் என்பது வழக்கு. கருவிகள் மின்சக்தியை வெப்பம் ( மின்னடுப்புகள்) , ஒளி ( மின்விளக்கு) , இயக்கம் ( மின்னியக்கி) , ஒலி ( ஒலிபெருக்கி), அல்லது ரசாயன மாற்றங்கள் போன்ற பல விதங்களில் மாற்றபடுகிறது. மின்சாரத்தை இயக்கத்தினால் உண்டாக்கலாம் , ரசாயனத்தால் அல்லது ஒளியில் இருந்து நேராக ஒளிமின்ன செதிழ்களால் உருவாக்கலாம் , மேலும் அதை ரசாயன மின்க்கூட்டினில் சேமிக்கலாம்.