வலிய இடைவினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

துகள் இயற்பியலில் வலிய இடைவினை என்பது, இயற்கையின் நான்கு அடைப்படை இடைவினைகளுள் ஒன்று. ஏனைய மூன்றும் மின்காந்தம், வலிகுறை இடைவினை, ஈர்ப்பு என்பனவாகும். வலிய இடைவினையை, வலிய விசை, வலிய அணுக்கரு விசை, குவார்கிடை விசை போன்ற பெயர்களாலும் அழைப்பர். அணுவின் அளவு மட்டத்தில் வலிய இடைவினை, மின்காந்த விசையிலும் 100 மடங்கு வலுவானது. மின்காந்த விசை, வலிகுறை இடைவினையிலும் வலுவானது. ஈர்ப்பு விசையே ஏனைய மூன்றிலும் வலுக் குறைந்தது.


வலிய இடைவினையை இரண்டு இடங்களில் கவனிக்க முடியும். பெரிய அளவு மட்டத்தில் (1 தொடக்கம் 3 பெம்டோமீட்டர் (பெமீ)) இவ்விசையே புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் இணைத்து அணுக்கருவை உருவாக்குகிறது. சிறிய அளவு மட்டத்தில் (0.8 பெமீ இலும் குறைவு) இந்த விசையே குவார்க்குகளை இணைத்து புரோட்டான்கள், நியூட்ரான்கள், ஆட்ரான்கள் போன்றவற்றை உருவாக்குகிறது.


புரோட்டான்களையும், நியூட்ரான்களையும் இணைத்து அணுக்கருவை உருவாக்கும்போது, வலிய இடைவினை, அணுக்கரு விசை எனப் பெயர் பெறுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வலிய_இடைவினை&oldid=1368490" இருந்து மீள்விக்கப்பட்டது