வர்த்தமான் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வர்த்தமான்
எழுத்துகிரீத் குரானா
இயக்கம்
  • பீம்சைன்
  • கிரீத் குரானா
இசை
  • கெர்சி லார்டு
  • இரகுநாத் சேத்
அத்தியாயங்கள்26
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்பீம்சைன்
ஓட்டம்13 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்கிளைம்ப் மீடியா
விநியோகம்தூர்தர்ஷன்
ஒளிபரப்பு
அலைவரிசைடிடி நேசனல்
படவடிவம்480ஐ

வர்த்தமான் என்பது 1994-95ஆம் ஆண்டின்போது டிடி நேசனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு அசைவுத் தொலைக்காட்சித் தொடராகும். இத்தொடரை பீம்சைன் தயாரித்தார். கிரீத் குரானா இயக்கினார். முப்பரிமாண அசைவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட முதல் இந்தியத் தொடர்களில் இதுவும் ஒன்றாகும்.[1]

இத்தொடர் குழந்தைகளுக்கு அறநெறிப் பாடங்களைப் பயிற்றுவிக்க முயன்றது. ஒருவர் தமது பலவீனங்களை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிக் கூறியது. இத்தொடரில் முதன்மைக் கதாபாத்திரமான புருஷ் (பொருள்: 'மனிதன்') தீய சங்கடம் (பொருள்: 'பிரச்சனை') மற்றும் தனது சொந்த எதிர்மறையான உணர்ச்சிகள் ஆகியவற்றுக்கு எதிராகப் போரிடுகிறது. இறுதியாகத் தனது நிகழ்காலத்தை (வர்த்தமான்) வெல்கிறது. இத்தொடரின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் முப்பரிமாணத்தைப் பயன்படுத்தி அசைவுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டன. இத்தொடரில் மொத்தம் 26 அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயமும் 13 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருந்தது.[2] கிளைம்ப் மீடியா என்ற நிறுவனம் இத்தொடருக்கான தயாரிப்பு வேலைகளைச் செய்தது.

உசாத்துணை[தொகு]

  1. "Discontent brews in Doordarshan".
  2. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 10 April 2016. பார்க்கப்பட்ட நாள் 10 August 2017.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)