வன ஆய்வு நிறுவனம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வன ஆய்வு நிறுவனம் वन अनुसन्धान संस्थान देहरादून
வன ஆய்வு நிறுவனம்
உருவாக்கம்1906
அமைவிடம்
வன ஆய்வு நிறுவனம் மற்றும் கல்லூரி வளாகம், டெகராடூன்
இணையதளம்www.fri.res.in

வன ஆய்வு நிறுவனம் (இந்தியா) (Forest Research Institute) வனவியல் ஆய்வு மற்றும் கல்விக்கான இந்திய கவுன்சில் அமைப்பினைச் சேர்ந்த ஒரு கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் வனவியல் ஆய்வில் இத்துறையில் செயல்பட்டு வருகின்ற முதன்மையான பயிலகமாகும். இது உத்தரகண்ட் மாநிலத்தின் டெகராடூனில் அமைந்துள்ளது. இது மிகவும் பழமையான நிறுவனங்களில் ஒன்றாகும். 1991 ஆம் ஆண்டில், இது பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது.[1]

வன ஆராய்ச்சி நிறுவனம் தம் வளாகத்தில் இந்திய வன சேவைக்கு (ஐ.எஃப்.எஸ்) தேர்ந்தெடுக்கப்படும் அலுவலர்களுக்கு பயிற்சியளிக்கும் ஊழியர் கல்லூரியான இந்திரா காந்தி தேசிய வன அகாடமியை (ஐ.ஜி.என்.எஃப்.ஏ) ஏற்று நடத்துகிறது.

வரலாறு[தொகு]

இந்நிறுவனம் 1878 ஆம் ஆண்டில் பிரித்தானிய இம்பீரியல் வனப்பள்ளியாக [2] டீட்ரிச் பிராண்டிஸ் [3] என்பவரால் நிறுவப்பட்டது. 1906 ஆம் ஆண்டில், இது பிரித்தானிய இம்பீரியல் வனவியல் சேவையின் கீழ் இம்பீரியல் வன ஆராய்ச்சி நிறுவனமாக மீண்டும் நிறுவப்பட்டது.[2]

கட்டடம்[தொகு]

வன ஆய்வு நிறுவனம் (இந்தியா) முகப்பு

1906 ஆம் ஆண்டில் இம்பீரியல் வன ஆராய்ச்சி நிறுவனமாக டெஹ்ராடூனில் நிறுவப்பட்ட இந்த வன ஆய்வு நிறுவனம் (எஃப்ஆர்ஐ) முதன்முதலில் மால் சாலையில் சந்த்பாக்கில் ( தற்போது டூன் பள்ளி அமைந்துள்ள இடம்) செயலாற்றி வந்தது. தற்போதைய இடத்தில் மிகப் பெரிய வளாகம் 1923 ஆம் ஆண்டில் வாங்கப்பட்டது. அதன் பின்னர் புதிய கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. சி.ஜி. ப்ளோம்ஃபீல்ட் என்பவரால் கிரேக்க-ரோமன் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப்பட்ட இதன் முதன்மைக் கட்டிடம் 1929 ஆம் ஆண்டில் அப்போதைய வைஸ்ராய் வில்லிங்டனின் முதலாம் மார்க்வெஸ் ஆன ஃப்ரீமேன் ஃப்ரீமேன்-தாமஸ் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. இது தற்போது ஒரு தேசியப் பாரம்பரியத் தளமாகச் செயல்படுகிறது.

டெஹ்ராடூன் வன ஆய்வு நிறுவனம் பழமையான நிறுவனங்களில் ஒன்றாகும். இது உலகம் முழுவதும் பாராட்டப்படுகின்ற ஒரு நிறுவனமாகும்.இந்த நிறுவனத்தின் வரலாறு இந்தியாவில் மட்டுமல்ல, முழு துணைக் கண்டத்திலும் அறிவியல் வனவியல் வளர்ச்சிக்கும் ஒத்ததாக அமைந்துள்ளது. இது 450 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள பசுமையான தோட்டத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. வெளிப்புறத் தோற்றத்தில் இமயமலையைக் காணமுடியும் வகையில் இது அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் முதன்மைக்கட்டிடம் ஒரு கண்கவர் மாளிகையாகும். இது கிரேக்க ரோமன் மற்றும் காலனித்துவ கட்டிடக்கலைப் பாணிகளை ஒருங்கே கொண்ட 2.5 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் ஒரு காலத்தில், கின்னஸ் புத்தகத்தில், உலகின் மிகப்பெரிய, முற்றிலும் செங்கல் கட்டமைப்பினைக் கொண்ட கட்டடம் என்ற பெயரினைப் பெற்றது. இந்த நிறுவனம் ஆய்வகங்கள், நூலகம், ஹெர்பேரியம், ஆர்போரேட்டா, அச்சகம் மற்றும் வனவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான சோதனைத் துறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்ட மேம்பட்ட உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது. க்ளாக் டவர் என்றழைக்கப்படுகின்ற இடத்திலிருந்து டெஹ்ராடூன்-சக்ரதா சாலையில் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய வன அடிப்படையிலான பயிற்சி நிறுவனம் ஆகும். பெரும்பாலான வன அலுவலர்கள் இந்த நிறுவனத்தின் ஒரு பகுதியாகப் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் கட்டிடத்தில் ஒரு தாவரவியல் அருங்காட்சியகமும் உள்ளது.,உலகம் முழுவதில் காணப்படுகின்ற பல்வேறு வகையான மரங்களை இங்கு காணமுடியும்..[4]

அமைவிடம்[தொகு]

டெஹ்ராடூன் வன ஆய்வு நிறுவனம் மற்றும் கல்லுரி பகுதி வளாகம் என்பது வடக்கில் கௌலாகருக்கும் தெற்கே இந்திய ராணுவ அகாதமிக்கும் இடையில் அமைந்துள்ளது. அதன் மேற்கு எல்லையில் டன்ஸ் நதி அமைந்துள்ளது.

வன ஆய்வு நிறுவனம் (இந்தியா) மாலையில் தோற்றம்

அருங்காட்சியகம்[தொகு]

இங்கு வனவியல் தொடர்பான ஒரு அருங்காட்சியகம் உள்ளது. இது தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும். ஒரு நபருக்கு நுழைவு கட்டணம் ரூ.40 ஆகும். வாகனங்களுக்கு கணிசமான நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தில் ஆறு பிரிவுகள் உள்ளன:

  • நோயியல் அருங்காட்சியகம்
  • சமூக வனவியல் அருங்காட்சியகம்
  • காடு வளர்ப்பு மியூசியம்
  • மர அருங்காட்சியகம்
  • மரம் அல்லாத வன பொருட்கள் அருங்காட்சியகம்
  • பூச்சியியல் அருங்காட்சியகம்

குறிப்புகள்[தொகு]

  1. "Inside". Archived from the original on 29 November 2010.
  2. 2.0 2.1 "Forest Research Institute Dehradun".
  3. Bauuuoiley, F. (1885). "The Indian Forest School". Transactions of the Scottish Arboricultural Society 11, part 2: 155–161. https://archive.org/stream/transactionsofsc11scot#page/154/mode/2up. 
  4. "FRI Dehradun - Forest Research Institute in Dehradun Uttarakhand".

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Forest Research Institute
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேலும் காண்க[தொகு]