வண்ணச்சினைச் சொல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் மயங்காமல் வரவேண்டியவை குறித்துக் குறிப்பிட்டு வரும்போது முதற்சொல்லை விளக்க வரும் சினைச்சொ- ல்லும், அடைச்சொல்லும் முதற்சொல்லும் எவ்வாறு வரவேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.

நூற்பா[தொகு]

"அடைசினை முதல்என முறைமூன்றும் மயங்காமை
நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல்"[1]

சேனாவரையர் விளக்கம்:[தொகு]

பண்புச் சொல்லும், சினைச்சொல்லும், முதற்சொல்லும் என மூன்றும் கூறப்பட்ட முறை மயங்காமல், வழக்கைப் பொருந்தி நடக்கும், வண்ணச் சொல்லோடு தொடர்ந்து சினைச்சொல்லையுடைய முதற்சொல் வரும்.[2]

எடுத்துக்காட்டு[தொகு]

  • செங்கால்நாரை - செம்மை + கால் + நாரை,
   செம்மை - அடை. 
கால் - சினை,
நாரை - முதல்
செம்மை காலுக்கு அடையாக வந்தது. கால் நாரைக்குச் சினையாக வந்தது.
  • பெருந்தலைச் சாத்தன் - பெருமை + தலை + சாத்தன்
   பெருமை - அடை
தலை - சினை
சாத்தன் - முதல்
பெருமை தலைக்கு அடையாக வந்தது. தலை நாரைக்குச் சினையாக வந்தது.

முறை வழுவி வருதல்[தொகு]

இளம்பூரணர் 'பெருந்தோள் சிறுநுசுப்பின் பேரமர்க்கண் பேதை' என்னும் உதாரணத்தைக் காட்டி இதில் ஒரு முதலுக்குப் பல சினைகளும் பல அடைகளும் வந்துள்ளதைச் சுட்டிக்காட்டி இது வழுவாக வந்துள்ளது என்கிறார். ஆனால் சேனாவரையர், 'சிறுநுதுப்பின் பேரமர்க்கண் பேதை' என்பது ஒருசொல் நீர்மைத்தாய் முதற்சொல்லாகும். ஆதலின் வண்ணச்சினைச்சொல் முறைப்படியே வந்துள்ளது[2] என்கிறார். பேராசிரியர் சுந்தரமூர்த்தி இதனை மறுத்து, 'மேற்கூறியது வழுவை அமைதிப்படுத்துமுகமாக நிற்பதன்றி, வழுவற்றதாகக் கோடற்குச் சிறிதும் இடம் அளிக்கவில்லை'[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா, 26.
  2. 2.0 2.1 2.2 கு.சுந்தரமூர்த்தி, தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1989, ப.104-108.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்ணச்சினைச்_சொல்&oldid=2991815" இலிருந்து மீள்விக்கப்பட்டது