வண்ணகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வண்ணகம் என்பது கலிப்பாவின் வகைகளில் ஒன்றாகத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. கலிப்பா தேவனை வாழ்த்தும் பாடலாக வரும். [1] கலிப்பா தேவனை வாழ்த்தும் பாடலாக வரும்போது வண்ணகம், ஒருபோகு என இரு வகைப்படும். [2] இவற்றில் வண்ணகம் பயின்றுவரும் கலிப்பாவை 'வண்ணக-வொத்தாழிசைக் கலிப்பா' என்பர். இந்தக் கலிப்பாவில் தரவு, தாழிசை, எண், வாரம் என்னும் நான்கு உறுப்புகள் இருக்கும். [3] 'எண்' என்னும் உறுப்பை அம்போதரங்கம் என வழங்குவர்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. ஏனை ஒன்றே,
    தேவர்ப் பராஅய முன்னிலைக்கண்ணே. (தொல்காப்பியம் 3-442 செய்யுளியல்)
  2. அதுவே,
    வண்ணகம், ஒருபோகு, என இருவகைத்தே. (தொல்காப்பியம் 3-443 செய்யுளியல்)
  3. 'வண்ணகம்தானே,
    தரவே, தாழிசை, எண்ணே, வாரம், என்று
    அந் நால் வகையின் தோன்றும்' என்ப (தொல்காப்பியம் 3-444 செய்யுளியல்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்ணகம்&oldid=1540244" இலிருந்து மீள்விக்கப்பட்டது