வணிகத்தில் பெண்கள் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2018 ஆம் ஆண்டு வணிகத்திற்கான பெண்கள் விருதுகள் நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள்

வணிகத்திற்கான பெண்கள் விருது (Women in Business Award) என்பது ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டிற்கான மாநாடு வழங்கும் இரு வருட விருது ஆகும். நிலையான, புதுமையான மற்றும் சர்வதேச அளவில் போட்டியிடும் சிறு மற்றும் குறு நிறுவனங்களை உருவாக்குவதை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான மாநாட்டால் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகளின் திட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு மட்டுமே போட்டி. இது முதன்முதலில் 2008 இல் வழங்கப்பட்டது.

2018[தொகு]

மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளர் யுனைசா அலி இல்சுபோ 2018 ஆம் ஆண்டு தங்க விருதை வென்றார். இசரது நிறுவனமான கான்ஸ்மோஸ் ல்டா 800 பேரைப் பணியமர்த்துகிறது. இந்த விருது அக்டோபர் 2018 இல் ஜெனிவாவில் வழங்கப்பட்டது.[1] பசுமைக் கட்டுமானம் மற்றும் பெண்களுக்காக அவர் உருவாக்கிய வேலை வாய்ப்புகள் குறித்து நீதிபதிகள் தனிக்கவனம் செலுத்தினர்.[2] வெள்ளி விருது ஜோர்தானைச் சேர்ந்த சர்வதேச ரோபாட்டிக்ஸ் கழகத்தின் நிறுவனரான திருமதி லாமா ஷாஷாவுக்கு வழங்கப்பட்டது. உகாண்டாவில் விக்டோரியஸ் எஜுகேஷன் சர்வீசஸின் அதிபரும் நிறுவனருமான திருமதி பார்பரா ஆஃப்வோனோ புயோண்டோவுக்கு வெண்கல விருது வழங்கப்பட்டது. இரண்டு சிறப்பு அங்கீகார விருதுகளும் வழங்கப்பட்டன.

சான்றுகள்[தொகு]

  1. Roy, Deblina. "Africa representatives reach UNCTAD's Women in Business Awards finale" (in pl). African Review. http://www.africanreview.com/events/event-news/africa-representatives-reache-unctad-s-women-in-business-awards-finale. 
  2. "Risk-taking female construction boss in Mozambique wins top UN award - News - GCR". www.globalconstructionreview.com. பார்க்கப்பட்ட நாள் 2018-11-30.