வசிபுதீன் தாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசிபுதீன் தாகர்
இயற்பெயர்பயாஸ் வசிபுதீன் தாகர்
பிறப்பு22 April 1968
புது தில்லி
பிறப்பிடம்இந்தியா
தொழில்(கள்)பாடுதல்

பயாஸ் வசிபுதீன் தாகர் (Faiyaz Wasifuddin Dagar) துருபத் வகையைச் சேர்ந்த இந்தியப் பாரம்பரிய பாடகர் ஆவார். துருபத் பாடகர் நசீர் பயாசுதின் தாகரின் மகனான இவர் தனது தந்தையின் இறப்பிற்குப் பிறகு தனியாகப் பாடினார். இவருக்கு 2010 இல் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது [1]

வாழ்க்கை மற்றும் பயிற்சி[தொகு]

வசிபுதீன் தாகர் நசீர் பயாசுதீன் தாகரின் மகனும், தாகர் வானியின் நசீர் சாகிருதீன் தாகரின் மருமகனும் ஆவார். தாகர் ஐந்து வயதிலிருந்தே தனது தந்தை மற்றும் இளைய மாமாவின் கீழ் பெரும்பாலான பயிற்சிகளைப் பெற்றார்.

1989 மற்றும் 1994 க்கு இடையில், இவர் தனது மாமா சாகிருதீன் தாகருடன் சேர்ந்து[2] ஜுகல்பந்திகளைப் பாடினார்.

முக்கியப் பதிவுகள்[தொகு]

வாசிபுதீன் தாகரின் பொது வாழ்க்கை 25 பிப்ரவரி 1989 இல் தொடங்கியது. தனது தந்தை இறந்த சில நாட்களுக்குப் பிறகு, தனது முதல் நிகழ்ச்சியை வழங்கினார். தனது மாமா சாகிருதீன் தாகருடன் சேர்ந்தும் பாடினார். 1992 இல் சுவிட்சர்லாந்து, இந்தியா மற்றும் ஜப்பானில் வாசிபுதீனின் முதல் பெரிய நிகழ்வு நடந்தது. பின்னர் சுவிட்சர்லாந்து, இந்தியா மற்றும் அமெரிக்காவில் முக்கிய பதிவுகளை பதிவு செய்துள்ளார். இவர்களது வாழ்க்கை மற்றும் இசையை அடிப்படையாக வைத்து ஒரு பிரெஞ்சு தொலைக்காட்சி நிறுவனம் திரைப்படம் எடுத்தது.

வாசிபுதீன் தாகர் 2000 ஆம் ஆண்டு முதல் வட அமெரிக்காவில் துருபத் தனி இசை நிகழ்ச்சியை நடத்தினார். முதன்முதலில் நியூயார்க்கில் 2000 ஆம் ஆண்டில் நேரலை நிகழ்ச்சியை நடத்தினார். அங்கு பிஹாக் இராக இசையை வழங்கினார். பின்னர் ஐக்கிய நாடுகள் அவை, சிகாகோ நகரம், சுமித்சோனியன் நிறுவனங்கள், வாஷிங்டன் பல்கலைக்கழகம், சியாட்டில், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், போன்ற பல மதிப்புமிக்க இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தினார்.

சான்றுகள்[தொகு]

  1. Ministry of Home Affairs(25 January 2010). "This Year's Padma Awards announced". செய்திக் குறிப்பு.
  2. Khanna, Shailaja (10 March 2017). "Lifting the elephant's foot". The Hindu. https://www.thehindu.com/entertainment/music/lifting-the-elephants-foot/article17435669.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசிபுதீன்_தாகர்&oldid=3767138" இலிருந்து மீள்விக்கப்பட்டது