வசந்தசேனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The Indian painter Raja Ravi Verma made an oleographic print of Vasantasena depicting her the way she has been described in the play Mṛcchakaṭika. She is portrayed as a rich, beautiful and fine lady.
மிருச்சகடிகா நாடகத்தின் கதாநாயகன் வசந்தசேனாவை சித்தரிக்கும் ராஜா ரவிவர்மாவின் எண்ணையால் வரயப்பட்ட வண்ணப்பட அச்சு.

வசந்தசேனா (கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு), பண்டைய இந்திய இலக்கியங்களின் படி உஜ்ஜயினியின் ஆடல் கன்னிகையாக இருந்தார். அவர் பாடல், நடனம், கவிதை மற்றும் கவர்தல் போன்ற பல்வேறு கலை வடிவங்களில் அவரது அழகுக்காக புகழ் மற்றும் செழுமையைப் பெற்றார். அவர் சுத்ரகாவால் எழுதப்பட்ட சமஸ்கிருத நாடகமான மிருச்சகடிகாவின் (சிறிய களிமண் வண்டி) பெண் கதாநாயகி ஆவார். [1]

நாடகத்தில் பாத்திரம்[தொகு]

நாடகத்தில் வசந்தசேனா ஒரு வலுவான பாத்திரமாக சித்தரிக்கப்படுகிறார். ஒரு நாயகன் தன்னை கவர்ந்திழுக்க வருவார் என்று காத்திருக்கும் வழக்கமான கதாநாயகியாக இக்கதாபத்திரம் அமையவில்லை.

நாடகத்தின் படி, வசந்தசேனா தனது பரோபகாரம் மற்றும் தன்னலமற்ற தன்மையால் தனது செல்வம் அனைத்தையும் இழந்து கடுமையாக வறுமையில் வாடும் இளம் பிராமணரான சாருதத்தாவைக் காதலிக்கிறார். பணக்கார பரத்தையான வசந்தசேனா மிகவும் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறாள். ஆனால் சாருதத்தாவின் மிக உன்னதமான இயல்புக்காக அவன் மீது காதல் கொள்கிறாள். மகிழ்ச்சியுடன் திருமணமாகி ஒரு மகனைப் பெற்றிருந்தாலும், சாருதத்தா வசந்தசேனாவின் அழகுக்காகவும், அவளது நேர்த்தியான ஆளுமைக்காகவும், அவளது உன்னத குணத்திற்காகவும் காதலிக்கிறான். [2]

நாடகத்தில், சாருதத்தாவிடம் தன் காதலை வெளிப்படுத்துவதில், அவனை அணுகுவதில் அவள் மிகவும் தைரியமாகக் காட்டப்படுகிறாள். ஒரு அபிசாரிகா நாயகியைப் போல, சீற்றம் வீசும் புயலை பொருட்படுத்தாமல் அவரது வீட்டிற்குச் செல்லும்போது அவரது பாத்திரத்தின் வலிமை முழு ஆர்வத்துடன் காட்டப்படுகிறது. அவர்களின் காதல் விவகாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது சாருதத்தா அல்ல, வசந்தசேனாதான். எனவே, அவர் பண்டைய இந்திய இலக்கியம் மற்றும் இடைக்கால புராணக்கதைகளில் ஒரு வழக்கத்திற்கு மாறான முகவராகவும் வலிமையானவராகவும் இருக்கிறார்.

கலை மற்றும் ஊடகம்[தொகு]

வசந்தசேனாவின் சிற்பம் டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது

பழங்காலத்திலிருந்தே வசந்த்சேனாவின் புராணக்கதை பிரபலமாக இருந்ததால், கலைகள் மற்றும் ஊடகங்களின் களத்தில் வெவ்வேறு படைப்புகள், வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. சில அங்கீகரிக்கப்பட்ட படைப்புகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன:

  • குஷானா காலத்தைச் சேர்ந்த சிற்பம் : கி.பி 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிவப்பு மணற்கல் சிற்பம். ஒரு வேசி மாளிகையின் காட்சியை சித்தரிக்கிறது. இது டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
  • ராஜா ரவி வர்மாவின் சித்திரம்: 19 ஆம் நூற்றாண்டின் இந்திய கலைஞர் ராஜா ரவி வர்மா வசந்தசேனாவை சித்தரிக்கும் எண்ணையால் வரயப்பட்ட வண்ணப்படம் ஒன்றை உருவாக்கினார்.
  • திரைப்படங்கள்:

உத்சவ் என்பது 1984 ஆம் ஆண்டு வெளியான இந்தி சிற்றின்ப திரப்படம் ஆகும். இது சஷி கபூர் தயாரித்து கிரீஷ் கர்னாட் இயக்கிய இந்த நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. (in en) The Mrichchakati; Or, The Toy Cart: A Drama. V. Holcroft, Asiatic Press. 1826-01-01. https://archive.org/details/bub_gb_wZ0-AAAAcAAJ. 
  2. "The Little Clay Cart Index". www.sacred-texts.com. பார்க்கப்பட்ட நாள் 2017-04-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்தசேனா&oldid=3667187" இலிருந்து மீள்விக்கப்பட்டது