லூசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லூசு என்பது விவிலியத்தில் வரும் இரு இடங்களின் பெயர்.

ஆதியாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது[தொகு]

பெத்தேலுடன் தொடர்புடைய கானானிய அரச நகரம். இதன் பழைய பெயர் லூசு/ லூஸ் ( தொடக்க நூல் / ஆதியாகமம் 28 :19, 35: 6 ) . லூசும் பெத்தேலும் ஒரே நகரத்தை குறிக்கிறதா என்பதை குறித்து அறிஞர்களிடையே விவாதிக்கப்படுகிறது.லூசு என்பது கானானிய பெயர் , பெத்தேல் என்பது எபிரேய மொழி பெயரா ? என்றும் அல்லது ஒன்றுக்கொன்று அருகாமையில் உள்ள இருவேறு நகரங்களா ? என்றும் விவாதிக்கப்படுகிறது . விவிலியத்தில் , லூசுக்கு மறுபெயரிட்டவர் யாக்கோபு . "அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான். அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது. ஆதியாகமம் 28:19 "

நீதித் தலைவர்கள் / நியாதிபதிகளில் குறிப்பிட்டுள்ளது[தொகு]

லூஸ் என்ற இரண்டாவது நகரம்,  லூஸிலிருந்து வந்த மனிதரால் நிறுவப்பட்டது என்று நியாயாதிபதிகள் 1:22-ல் குறிப்பிடப்பட்டுள்ளது . " 22 யோசேப்பின் குடும்பத்தாரும் பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனார்கள். கர்த்தர் அவர்களோடேகூட இருந்தார்.  23 யோசேப்பின் புத்திரர் பெத்தேலை வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள். முன்னே அந்தப் பட்டணத்திற்கு லூஸ் என்று பேர். 24 அந்த வேவுகாரர் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிற ஒரு மனுஷனைக் கண்டு: பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை எங்களுக்குக் காண்பி. உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள். 25 அப்படியே பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான். அப்பொழுது அவர்கள் வந்து, பட்டணத்திலுள்ளவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அந்த மனுஷனையும் அவன் குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள். 26 அப்பொழுது அந்த மனுஷன் ஏத்தியரின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லூஸ் என்று பேரிட்டான். அதுதான் இந்நாள்மட்டும் அதின் பேர். "

இந்த இரண்டாவது லூஸ் , கோலான் ஹெய்டில் உள்ள பானியாஸின் வடமேற்கில் நான்கு மைல் தூரத்திலுள்ள லாசீஸ் அல்லது வஸ்ஸானியால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூசு&oldid=3584346" இலிருந்து மீள்விக்கப்பட்டது