லீனா நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீனா நாயர்

லீனா நாயர் (பிறப்பு 1969) யூனிலீவரின் முதல் பெண், முதல் ஆசிய, இளைய தலைமை மனித வள அலுவலர் மற்றும் யூனிலீவர் லீடர்ஷிப் எக்ஸிகியூட்டிவ் (யுஎல்இ) உறுப்பினர் ஆவார். இந்நிறுவனமானது யூனிலீவரின் வணிக மற்றும் நிதி செயல்திறனை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.[1]

190 நாடுகளில் பரவியுள்ள பல ஒழுங்குமுறை மற்றும் தொழிலாளர் சூழல்களில் செயல்படும் யூனிலீவரின் மனித மூலதனத்திற்கான ஒட்டுமொத்த பொறுப்பை லீனா ஏற்றுக்கொள்கிறார். சுற்றுச்சூழல் மற்றும் நேர்மறையான சமூக தாக்கத்துடன் யூனிலீவர் தனது லட்சிய வணிக வளர்ச்சியை சந்திக்க உதவும் உயர் வணிக செயல்திறனை வழங்குவதற்காக நிறுவனம் சரியான நபர்கள், சரியான பொறுப்புகளில், சரியான திறன்களுடனும் மனநிலையுடன் இருப்பதை உறுதி செய்கிறார். அமைப்பிற்கான பன்முகத்தன்மை மற்றும் பிற தொடர்பான திட்டங்களுக்கு அவர் தலைமை தாங்குகிறார், அதன் பணியாளர்கள் உண்மையிலேயே பல்துறையைச் சார்ந்த, அனைத்துத்திறமையினையும் கொண்டவர்கள் என்பது இதன்மூலம் உறுதி செய்யப்படுகிறது.[2]

2007 ஆம் ஆண்டில், லீனா இந்துஸ்தான் யூனிலீவரின் இளைய நிர்வாக இயக்குநராகவும், 90 ஆண்டுகளில் இந்துஸ்தான் யூனிலீவரின் நிர்வாகக் குழுவில் பணியாற்றும் முதல் பெண்மணியாகவும் ஆனார். ஒரு வருடம் கழித்து இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் யூனிலீவரின் வளர்ச்சிக்கு பொறுப்பாக போயூனிலீவர் தெற்காசியா தலைமைக் குழுவின்முதல் பெண்மணியாக அவர் நியமிக்கப்பட்டார்,

வாழ்க்கை[தொகு]

அவரது சொந்த ஊர் மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூர் ஆகும். அவர் கோலாப்பூரில் உள்ள ஹோலி கிராஸ் கான்வென்ட் பள்ளியின் மாணவியாவார். எக்ஸ்.எல்.ஆர்.ஐ.யில் பட்டம் பெறுவதற்கு முன்பு மகாராஷ்டிரா சாங்லி என்னுமிடத்திலுள்ள வால்சந்த் பொறியியல் கல்லூரியில் பயின்றார். ஜாம்ஷெட்பூருக்குப் பிறகு கொல்கத்தா, தமிழ்நாட்டில் அம்பத்தூர், மகாராஷ்டிராவில் தஜோலா ஆகிய இடங்களில் வெவ்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றத் தொடங்கினார்.[3]

ஒவ்வொரு நாளையும் மிகுந்த சவாலோடு எதிர்கொள்கிறார். தான் பணியாற்றும் நிறுவனத்தில் உழைப்பின் காரணமாகவும், பணியின் மேல் உள்ள மிகுந்த ஈடுபாட்டின் காரணமாகவும் அவர் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டார். லண்டன் ஆங்கிலோ டச்சு நிறுவனத்திற்கு இந்துஸ்தான் யூனிலீவரின் இந்தியப் பிரிவினை தலைமையகத்தின் இடம் மாற்றம் செய்தார். அங்குதான் அவர் தலைமைப்பொறுப்பினயும், நிர்வாக இயக்குநர் என்ற பொறுப்பினையும் பெற்றார். அவருக்கு முன்பு பணியாற்றியவர் டக் பாலி என்பவர் ஆவார். அவர் பெரிய நுகர்வோர் பொருள்களின் நிறுவனத் தளத்தில் மிகவும் முக்கியமானவராகக் கருதப்பட்டவர். அவர் 38 ஆண்டுகள் அங்கு பணிப்பொறுப்பில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வெற்றியின் பின்னணி[தொகு]

அவருக்குப் பதவி உயர்வு தந்தபோது அந்நிறுவனம் அவரைப் பாராட்டி அவ்வுயர்வைத் தந்ததாகக் கூறியது. அந்த நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவராகப் பணியாற்றிய நிலையில் நிறுவனத்தின் பொருளை வரலாறு காணாத அளவிற்கு முன்கொண்டு வந்து பெருமைப்படுத்தியதாகவும், நிறுவனத்தின் செயல்பாட்டு முயற்சியினை பல்வேறு திட்டங்கள் மூலமாக உயர்த்தியதாகவும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எக்ஸ்.எல்.ஆர்.ஐ.யின் தங்கப்பதத்தைப் பெற்ற அவர் இருபது ஆண்டுகளில் நிறுவனத்தில் பலவித புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அவற்றில் ஒன்று பணியினை விட்டுச் சென்ற மகளிரை அப்பணியில் மறுபடியும் சேர்த்துக்கொள்வது என்பதாகும். அவர் எவ்விதப் பிரச்சினைகளுக்கும் ஆளாதாவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தில் பணியாளர் உறவினை மிகவும் சீரான நிலையில் கொணர்ந்தார். 40 கிளைகளும், 96 சங்கங்களையும் கொண்டு அமைந்துள்ள அந்நிறுவனத்தில் அனைவரையும் அரவணைத்துச் சென்றார். ஆண்டுக்கு 50,000 மனித நாள்கள் இழப்பு என்பதை ஆண்டுக்கு 100க்கும் குறைவான மனித நாள்கள் இழப்பு என்ற நிலைக்குக் கொண்டுவந்தார்.[4]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

  • இங்கிலாந்தில் திறமையான இந்திய வணிகத் தலைவர்களில் ஒருவராக கிரேட் பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் அங்கீகரிக்கப்படல், 2017
  • BAME (கருப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன) தலைவர்களின் முதல் 20 பட்டியலில் முதன்மை இடம் பெறல், பைனான்சியல் டைம்ஸ், 2016 & 2017
  • 7 ஆண்டுகளாக தொடர்ந்து வணிகத்தில் 25 சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் இடம் பெறல், பிசினஸ் டுடே
  • சில்லறை மற்றும் நுகர்வோர் பிரிவில் இங்கிலாந்து முதல் பெண்கள் விருதினைப் பெறல், 2015
  • இந்தியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க 50 பெண்களில் இடம் பெறல், வெர்வ் இதழ்
  • சீசன்ட் எச்.ஆர் நிபுணர், என்.எச்.ஆர்.டி.என், 2010
  • இந்துஸ்தான் டைம்ஸ் எச்.ஆர் சாம்பியன் விருதும், ஸ்டார் நியூஸ் டேலண்ட் லீடர்ஷிப் ஆண்டின் சிறந்த மனிதத்தொடர்புத்தலைவர் விருதும் பெறல்

குறிப்புகள்[தொகு]

  1. S, Radhakrishna N. (2019-06-29). "Indian origin Leena Nair to join BT Board". EasternEye. பார்க்கப்பட்ட நாள் 2019-08-08.
  2. "Unilever likely to name Leena Nair as its global HR chief".
  3. "As good as it gets". business today. பார்க்கப்பட்ட நாள் 10 February 2013.
  4. 'Ever eager to take on the day', Leena Nair will handle Unilever HR Economic Times, 17 December 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீனா_நாயர்&oldid=3773879" இலிருந்து மீள்விக்கப்பட்டது