லாக்டன் நிறுவனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாக்டன்
வகைதனியார்
நிறுவுகைகேன்சஸ் நகரம் (மிசூரி) அமெரிக்கா (1966 (1966))
நிறுவனர்(கள்)ஜேக் லாக்டன்
தலைமையகம்கேன்சஸ் நகரம் (மிசூரி), அமெரிக்கா
அமைவிட எண்ணிக்கை130 அலுவலகஙகள்
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
முதன்மை நபர்கள்தலைவர் ரான் லாக்டன், நிர்வாகத் தலைவர், முதன்மை செயல் அலுவலர் பீட்டர் குளூன், நிர்வாகத் தலைவர், உலகளாவிய வளர்ச்சி அதிகாரி ஹிராம் மர்ரெரோ, முதன்மை நிர்வாக அலுவலர், லாக்டன் அமெரிக்கா சையது தைம், முதன்மை செயல் அலுவலர், ஐரோப்பா எஜ் ஹென்டேனார்
தொழில்துறைகாப்பீடு
உற்பத்திகள்காப்பீடு, இடர் மேலாண்மை, பணியாளர் நலன்கள்
வருமானம்2022 உலகளாவிய வருவாய் $3.1 பில்லியன்
பணியாளர்10,750+

லாக்டன் என்பது காப்பீடு, இடர் மேலாண்மை மற்றும் பணியாளர் நலன்களை வழங்கும் ஒரு அமெரிக்க நிறுவனம் ஆகும். இது உலகின் மிகப்பெரிய தனியார் காப்பீட்டு தரகு நிறுவனமாகும்.[1] இதன் கேன்சஸ் நகரம் (மிசூரி) தலைமையகம் தவிர 130க்கும் மேற்பட்ட அலுவலகங்களை இயக்குவதோடல்லாமல் 140க்கும் மேற்பட்ட நாடுகளில் வர்த்தகம் செய்கிறது. தற்போது லாக்டனில் உலகம் முழுவதுமாக 10,750க்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.[2]

இந்த நிறுவனம் 1966இல் ஜேக் லாக்டன் என்பவரால் நிறுவப்பட்டது. இது உலகின் 8வது பெரிய காப்பீட்டு தரகு நிறுவனமாக உள்ளது.[3] இடர் மேலாண்மை, விபத்து, உத்தரவாதம், தொழில்முறை இழப்பீடு போன்றவை உள்ளிட்ட பலவகை சேவைகளுடன் லாக்டன் பரந்த அளவிலான தொழிலகங்களுக்கு சேவை செய்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக லாக்டன் கரிம வளர்ச்சியைப் பதிவுசெய்து வருகின்றது. 2022 நிதியாண்டில் லாக்டனின் உலகளாவிய வருவாய் $3.1 பில்லியனை எட்டியது [4]

வரலாறு[தொகு]

1966இல் ஜேக் லாக்டன் (1942-2004) லாக்டன் காப்பீட்டை நிறுவினார்.[5] 24 வயதாகி இருந்த அவர், 1964 இல் மிசூரி கேன்சஸ் நகர பல்கலைக்கழகத்தில் பொருளியலில் பட்டம் பெற்றார்.[5] மிசூரி பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன்பு அவர் மிசூரியில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரியில் இருந்து மாற்றப்பட்டார். லாக்டன் காப்பீட்டு நிறுவனத்தை நிறுவுவதற்கு முன்பு ஜேக் லாக்டன் ஒரு உத்தரவாதப் பிணைப்பு நிறுவனத்தில் எழுத்துறுதி வழங்குபவராக பணியாற்றியபடி ஒப்பந்ததாரர்களுக்கு சேவை செய்வதில் நிபுணத்துவம் பெற்றார்.

ஜேக் தனது பெற்றோருடன் இணைந்து அலுவலகச் செலவுகளைப் பகிர்ந்துகொள்ளவும், அலுவலக உதவியைப் பெறுவதற்கும் பணம் வைத்திருக்கும் போது தான் லாக்டன் நிறுவப்பட்டது. முந்தைய வேலையில் தன்னுடன் பணிபுரிந்த கேரி ஹாம்ப்ரைட் உள்ளிட்ட தொழில்துறையில் தலைசிறந்தவர்களை தன்னுடன் பணிபுரிவதற்க்காக தங்கள் பதவிகளை விட்டு வெளியேறும்படி ஜேக்கால் வற்புறுத்த முடிந்தது. 1976இல் ஜேக்கின் சகோதரர் டேவிட் எம். லாக்டன் அந்நிறுவனத்தின் ஒன்பதாவது பணியாளராக சேர்ந்தார். பிற்க்காலத்தில் டேவிட் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலராக பணியாற்றினார். 2003-2020 காலகட்டத்தில், 2020 மே மாதம் ஜேக்கின் மகன் ரான் லாக்டன் பொறுப்பேற்கும் வரை டேவிட் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றினார். தலைவராக பொறுப்பேற்பதற்கு முன், ரான் 2017-2020 வரை முதன்மை செயல் அலுவலராக பணியாற்றியதோடல்லாமல் நிறுவனத்தில் தனது 30+ ஆண்டுகளில் பல பொறுப்புகளையும் வகித்தார்.[6]

லாக்டன் 1979இல் டென்வரில் ஒரு அலுவலகத்தை வெற்றிகரமாக நிறுவிய பிறகு நாடு முழுவதும் வர்த்தகத்தை விரிவுபடுத்தத் தொடங்கினார். புதிய பகுதிகளில் வெற்றிகரமான வர்த்தகத் தலைவர்களைக் கண்டறிந்து அவர்களை ஆட்சேர்ப்பு செய்து புதிய அலுவலகங்களை நிறுவுவதில் லாக்டன் கவனம் செலுத்தியது. இன்றும் இந்த வர்த்தக மாதிரியைத்தான் லாக்டன் நிறுவனம் கடைபிடிக்கிறது.[7]

2006ஆம் ஆண்டில், அலெக்சாண்டர் ஃபோர்ப்ஸ் பன்னாட்டு இடர் சேவைகள் என்ற நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலம் லாக்டன் உலகளவில் விரிவடைந்து, உலகின் மிகப்பெரிய தனியாருக்கு சொந்தமான தரகராக மாறியது.[8][9][10]

குறிப்புகள்[தொகு]

  1. "கே யூ இன்சூரன்ஸ் சான்றிதழ் திட்டத்தை விரிவுபடுத்த லாக்டன் குடும்பம் $2 மில்லியன் வழங்குகிறது" (in ஆங்கிலம்). 2021-11-09. பார்க்கப்பட்ட நாள் 2022-10-18.
  2. "என்பீசி இன்டர்நேஷனல் முன்னாள் நிர்வாகியை லாக்டன் தமது புதிய தலைமை நிதி அதிகாரியாக அறிவித்துள்ளது". பார்க்கப்பட்ட நாள் 2020-09-01.
  3. "உலகின் 10 பெரிய காப்பீட்டு தரகர்கள்" (PDF).
  4. "லாக்டன் 2019 நிதியாண்டில் வருவாய் சாதனையை முறியடித்தது | லாக்டன் நிறுவனங்கள்". பார்க்கப்பட்ட நாள் 2020-07-02.
  5. 5.0 5.1 "லாக்டன் நிறுவன செய்திகள் | இன்சூரன்ஸ் பிசினஸ் யூகே". பார்க்கப்பட்ட நாள் 2022-10-18.
  6. "லாக்டன் பீட்டர் குளூனை அடுத்த முதன்மை நிர்வாக அலுவலராக அறிவித்தது" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-02.
  7. "லாக்டன்: 'எங்கள் பயணத்தின்போது பலவற்றை நாங்கள் உருவாக்கினோம்'".
  8. "போஸ்ட் அஷ்யூரன்ஸ் தரகர்கள் உலகளாவிய காப்பீட்டாளர்களின் கூட்டமைப்பை நடத்துகின்றனர்" (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-12-11. பார்க்கப்பட்ட நாள் 2021-07-27.
  9. "ஃபோர்ப்ஸ் பன்னாட்டு நிறுவனத்தை கையகப்படுத்தி மிகப்பெரிய தனியார் தரகராக உருவாகும் லாக்டன்". 20 ஆகத்து 2006. பார்க்கப்பட்ட நாள் 9 திசம்பர் 2013.
  10. "ஃபோர்ப்ஸ் பன்னாட்டு நிறுவனத்தை கையகப்படுத்துவதன் மூலம் உலகின் மிகப்பெரிய தனியார் உடமை காப்பீட்டு தரகராகும் லாக்டன்". 21 ஆகத்து 2006. பார்க்கப்பட்ட நாள் 16 November 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாக்டன்_நிறுவனங்கள்&oldid=3915084" இலிருந்து மீள்விக்கப்பட்டது