லட்சுமிஹர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லட்சுமிஹர் என்பவர் இந்தியாவின் தமிழ்நாட்டின், சென்னையில் உள்ள ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். குறிப்பிடத்தக்க சமகால சிறுகதை எழுத்தாளர். தற்போது திரைப்பட உருவாக்கம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தன்னுணர்வை உதறிய, தன்னிச்சையான கதை சொல்லும் மொழியை கொண்டவர்.மேலும் தன்னுடைய அனுபவம் ஏற்படுத்திய மனபிறழ்வு மற்றும் தத்துவ விசாரிப்புகளின் கேலி இவைகளை கதை என்னும் நிலப்பரப்பில் சிதறடித்தலையே விரும்புகிறவராக இருக்கிறார்.

வாழ்க்கை குறிப்பு[தொகு]

1998 ஆம் ஆண்டில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கீழச்செம்பட்டியில் திருநாவுக்கரசு மற்றும் அருணா இணையருக்குப் பிறந்தவர்.சகோதரி பவதாரிணி. கரூரில் உள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் இளங்கலை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் சென்னை ப்ளூ ஓஷன் ஃபிலிம் & டெலிவிஷன் அகாடமியில் டிஜிட்டல் பிலிம் எடிட்டிங் டிப்ளமோ பெற்றவர் ஆவார்.

இலக்கிய வாழ்கை[தொகு]

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து எழுதி வருபவர். கணையாழி, கல்குதிரை, தாமரை, காலச்சுவடு,உயிர்மை,உயிர் எழுத்து, கனலி,யாவரும், வனம், வல்லினம், பதாகை, வாசகசாலை, கலகம், குறி, வாழை சூழலியல் போன்ற இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார்.

இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு யாவரும் பதிப்பகத்தால் 2021 இல் "ஸெல்மா சாண்டாவின் அலமாரி பூச்சிகள்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கு முன்னணி தமிழ்க் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் முன்னுரை எழுதினார்.

முன்னுரையில் அவர் ஆசிரியரின் கதைகளை இவ்வாறு கூறுகிறார். ”மேலோட்டமாய் மிதப்பது அல்லது பிரதிகளில் இன்பம் காணுவது என நீளும் இக்கதைகளை வாசியுங்கள்.ஏற்கனவே நீங்கள் கொண்டுள்ள அர்த்தங்களை இழந்து வாசியுங்கள்.”

தமிழின் முக்கிய நாளிதழ் ஆன ஹிந்து தமிழ் திசை வெளியீட்டு உள்ள கட்டுரையில் “நம்பிக்கை அளிக்கும் நவ எழுத்துகள் தலைப்பின் கீழ் இவரின் கதைகளை மதிப்பிடுகிறது.[1]

“நிலம்,இயற்கை,தொன்மம்,காமம்,மாயயதார்த்தம்,என பலவகைமைகளில் இவரது புனைவுகள் வாசகருடன் ஊடாடுகின்றன.”

மேலும் பிரபல எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா, அவரின் மதிப்புரையில் "அவரது பெரும்பாலான கதைகள் உள்ளடக்கம் மற்றும் கதை சொல்லும் பாணியில் என்னை ஆச்சரியப்படுத்தியது மற்றும் மகிழ்வித்தது" என்கிறார்.

2022 ஆம் ஆண்டில், அவர் தனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான “டார்லிங் என் பெயர் சூட்டப்பட்ட சித்தாந்தம்”யை வெளியிட்டார்.

இந்த தொகுப்பிற்கு எழுத்தாளர் என்.ஸ்ரீராம் அவர்கள் எழுதிய முன்னுரையில் “ஏதோவொரு வகையில் கதைமொழி வீரியமுடன் இயங்கி இக்கதைகளை வாசிக்கும் வாசகனுக்கு புது அனுபவமாக்கி விடுகின்றது...

லட்சுமிஹரின் கதைத்தளத்தை கணித்து அறுதியிட்டுக் கூறமுடியாத புதிர்தன்மையே நீள்கிறது..” என்கிறார்.

2023 இல், அவர் தனது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான “கிளாஸிக் டச்” யை வெளியீட்டார். இக்கதைகள் முழுவதும் சமகால இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி எழுதப்பட்ட கதைகள்.

2024 இல் இவரது நான்காவது சிறுகதை தொகுப்பான “கூத்தொன்று கூடிற்று” யாவரும் பதிப்பகம் வெளியீடாக வரவுள்ளது.

நூல்கள்[தொகு]

  • ஸெல்மா சாண்டாவின் அலமாரி பூச்சிகள் (2021)[2]
  • டார்லிங் என பெயர் சூட்டப்பட்ட சித்தாந்தம் (2022)[3]
  • கிளாஸிக் டச் (2023).
  • கூத்தொன்று கூடிற்று (2024)

விருதுகள்[தொகு]

  • வாசக சாலை அமைப்பு வழங்கும் 2022 ஆம் ஆண்டின் “சிறந்த அறிமுக எழுத்தாளர் ” விருது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "நம்பிக்கை அளிக்கும் நவ எழுத்துகள்". 2024-01-13. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  2. ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள்- லட்சுமிஹர்:
  3. டார்லிங் என பெயர் சூட்டப்பட்ட சித்தாந்தம்- லட்சுமிஹர்:
  4. யூடியூபில் விருது வழங்கப்படும் காணொளி
"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமிஹர்&oldid=3957242" இலிருந்து மீள்விக்கப்பட்டது