ரோஷ் ஹஷானா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரோஷ் ஹஷானா Rosh Hashanah |
|
|---|---|
சோபார், ரோஷ் ஹஷானா திருவிழாவின் அடையாளம் |
|
| பொதுப் பெயர் | எபிரேயம்: ראש השנה |
| மாற்றுப் பெயர் | யூத புது வருடம் |
| அனுசரிப்பவர்கள் | யூதம், யூதர், சமாரியர். |
| வகை | யூதம் |
| தொடக்கம் | திஸ்ரி மாதத்தின் முதல் நாளில் ஆரம்பமாகின்றது |
| முடிவு | திஸ்ரி மாதத்தின் இரண்டாம் நாள் |
| 2012 நாள் | சூரிய மறைவு, செப்டம்பர் 16 - பொழுது புலர்தல், செப்டம்பர் 18 |
| 2013 நாள் | சூரிய மறைவு, செப்டம்பர் 4 - பொழுது புலர்தல், செப்டம்பர் 6 |
| 2014 நாள் | சூரிய மறைவு, செப்டம்பர் 24 - பொழுது புலர்தல், செப்டம்பர் 26 |
| அனுசரிப்புகள் | தொழுகைக் கூடத்தில் வேண்டுதல் செய்தல், தனிப்பட்ட மீட்டல், சோபாரைக் கேட்டல். |
ரோஷ் ஹஷானா (Rosh Hashanah, எபிரேயம்: ראש השנה, "வருடத்தின் தலை" என பொருள்கொள்ளப்படுவது), என்பது யூதப் புதுவருடம். இது அதி பரிசுத்த நாட்களில் முதலாவது ஆகும். இது வடக்கு அரைக்கோளத்தின் ஆரம்ப இலையுதிர் காலத்தில் இடம்பெறும். இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் ரோஷ் ஹஷானா, யூத நாட்காட்டியில் முதல் முதல் மாதமான திஸ்ரி மாதம் முதல் தினத்தில் ஆரம்பமாகும். இந்த நாள் ஆதாம் ஏவாளின் படைப்பின் ஆண்டு விழா எனவும், அவர்கள் கடவுளின் உலகில் மனித குலத்தின் பங்கு பற்றி உணர்ந்த செயல்பட்டதும் என நம்பப்படுகின்றது.[1] ரோஷ் ஹஷானாவில் சோபார் ஊதக் கேட்டல், அடையாள உணவாக தேனில் அமிழ்த்தி எடுக்கப்பட்ட அப்பிளை உண்ணல் என்பன நடைமுறையாகும். "ஷனா டோவா" என்பது இந்த நாளில் வாழ்த்தும் முறையாகும்.
குறிப்புக்கள் [தொகு]
உசாத்துணை [தொகு]
- Angel, Marc (2000). Exploring Sephardic Customs and Traditions. Hoboken, N.J.: KTAV Pub. House in association with American Sephardi Federation, American Sephardi Federation--South Florida Chapter, Sephardic House. ISBN 0-88125-675-7.
வெளி இணைப்புக்கள் [தொகு]
| விக்சனரியில் Rosh Hashanah என்னும் சொல்லைப் பார்க்கவும். |
| விக்கி ஊடக நடுவத்தில் Rosh Hashanah தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Rosh Hashana Prayers For Sephardic Jews
- From Our Collections: Marking the New Year - Online exhibition from Yad Vashem on the celebration of Rosh Hashanah and Yom Kippur before, during, and after the Holocaust