ரோகன் பண்டிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோகன் பண்டிட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரோகன் பண்டிட்
பிறப்பு13 சனவரி 1981 (1981-01-13) (அகவை 43)
பங்குநடுவர்
நடுவராக
இ20ப நடுவராக1 (2023)
பெண்கள் தேர்வு நடுவராக1 (2014)
பெஒநாப நடுவராக3 (2014–2019)
பெஇ20 நடுவராக4 (2018)
மூலம்: ஈஎசுபிஎன் கிரிக்கின்போ, 23 நவம்பர் 2023

ரோகன் பண்டிட் (பிறப்பு 13 ஜனவரி 1981) ஒரு இந்தியத் துடுப்பாட்ட நடுவர் ஆவார். [1] ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளிலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளிலும் அவர் நடுவராகக் கடமையாற்றியுள்ளார். [2]

நடுவர் தொழில்[தொகு]

சூலை 2022 இல், பண்டிட் பிசிசிஐயின் நடுவர் குழுவின் ஏ+ பிரிவில் சேர்க்கப்பட்டார்.[3] அக்டோபர் 2023 இல், அனில் சவுத்ரிக்குப் பதிலாக ஐ. சி. சி நடுவர்களின் பன்னாட்டு நடுவர்கள் குழுவில் அவர் அறிமுகப்படுத்தப்பட்டார்.

நவம்பர் 24, 2023 இல், இந்தியாவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் இடையிலான முதலாவது இருபது20 போட்டியின் போது பண்டிட் தனது முதல் ஆண்கள் பன்னாட்டு இருபது20 போட்டியில் கடமையாற்றினார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rohan Pandit". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.
  2. "Ranji Trophy, Group A: Railways v Tamil Nadu at Bilaspur, Oct 13-16, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 October 2016.
  3. "BCCI introduces A+ category for umpires". The Times of India. 22 July 2022. https://timesofindia.indiatimes.com/sports/cricket/news/bcci-introduces-a-category-for-umpires/articleshow/93052082.cms. 
  4. "1st T20I (N), Visakhapatnam, November 23, 2023, Australia tour of India 2023-24". ESPNcricinfo (in ஆங்கிலம்). 23 November 2023. பார்க்கப்பட்ட நாள் 23 November 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகன்_பண்டிட்&oldid=3918443" இலிருந்து மீள்விக்கப்பட்டது