ரொறன்ரோ பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஒரு அரச ஆய்வுப் பல்கலைக்கழகம். இது கனடா நாட்டில், ஒன்ராறியோ மாகாணத்தில், ரொறன்ரோ மாநகரில் அமைந்துள்ளது. 1827 அமைக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் உலகின் சிறந்தவற்றில் ஒன்று. இதற்கு மூன்று வளாகங்கள் உள்ளன (சென். யோர்ச், ஸ்காபிரோ, மிச்சசாகா). மருத்துவம், சட்டம், அறிவியல் ஆகிய துறைகளுக்கு இது சிறப்பாக அறியப்படுகிறது. இங்கு 1000 மேலாண தமிழ் மாணவர்கள் பயில்கின்றனர்.