ரேகா பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரேகா பாண்டே (Rekha Pande பிறப்பு 6 ஜூன்) தற்போது சுற்றுச்சூழல் மேம்பாட்டு மூலம் அதிகாரமளிக்கும் சங்கமான சீட் டின் இயக்குநராக உள்ளார். இவர் பெண்கள் ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநராகவும், இந்தியாவின் ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் வரலாற்று பேராசிரியராகவும் இருந்தார். இவர் வரலாறு மற்றும் மகளிர் ஆய்வின் இடை-ஒழுங்கு பகுதிகளில் நன்கு அறியப்பட்ட அறிஞர்களுள் ஒருவர் ஆவார். இவர் சர்வதேச ஆய்வுகள், பெண்கள் வரலாறு மற்றும் பாலின ஆய்வுகள் துறையில் கல்வியாளராகவு உள்ளார். ஒரு பெண்ணிய வரலாற்றாசிரியர் என்ற முறையில், இவர் பெண்களின் வரலாற்றை மறுகட்டமைப்பு செய்வதிலும், தெற்காசிய சூழலில் பெண்களின் அடிபணிவின் வரலாற்று வேர்களைப் புரிந்துகொள்வதிலும் தத்துவார்த்த மற்றும் முறையான சிக்கல்களில் அக்கறை கொண்டிருந்தார். பிராந்திய/உள்ளூர் மட்டங்களில் மாறுபட்ட வரலாற்றுச் சூழல்களை ஆராயவும், தேசிய மற்றும் உலக அளவில் பெண்களின் இனப்பெருக்கம் மற்றும் கீழ்படிதலை பல்வேறு தொடர்புடைய, மாறுபட்ட, சமகால சூழல்களில் விளக்கவும் இவர் முயற்சிக்கிறார். இவர் இந்தியாவில் பெண்கள் இயக்கத்துடன் தொடர்புடைய கல்வி ஆர்வலராகவும் இருந்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ரேகா பாண்டே , உத்திரகண்டத்தில் இமயமலை பள்ளத்தாக்குகளில் பிறந்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவர் பள்ளிக்கல்வி பயின்றார். இவர் ஹோலி ஃபேமிலி உயர்நிலைப் பள்ளி மற்றும் கேந்திரிய வித்யாலயாவில் படித்தார். இவர் தனது பட்டப்படிப்பை அலகாபாத் பல்கலைக்கழகத்தில் படித்தார். அங்கு இவர் வரலாறு, ஆங்கில இலக்கியம் மற்றும் அரசியல் அறிவியல் ஆகியனவற்றைக் கற்றார் . அலகாபாத் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார்.

தொழில்[தொகு]

ரேகா பாண்டே அலகாபாத் பல்கலைக்கழகம், மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் மற்றும் ஐதராபாத் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் அனுபவம் பெற்றவர். [1] சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நான்கு ஆண்டுகளாக இந்தியாவின் மத மற்றும் கலாச்சார பாரம்பரியம் குறித்த பாடத்தையும் இவர் கற்பித்தார். இவர் வரலாற்று பேராசிரியர் மற்றும் வரலாற்றுத் துறையில் கற்பித்தல் பணியினை மேற்கொள்கிறார். இவர் ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் பெண்கள் ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவராக இருந்தார். இதற்கு முன்பு இவர் வரலாற்றுத் துறையின் தலைவராக இருந்தார். இவர் மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்திலும்,ஐராபாத் பல்கலைக்கழகத்திலும் பெண்கள் ஆய்வுக்கான இரண்டு மையங்களின் நிறுவன உறுப்பினராக இருந்தார். இந்தியாவில் முதன்முறையாக 2014 இல் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் உலக காங்கிரசின் தலைவராக இருந்தார். [2]

பங்களிப்புகள்[தொகு]

தேசிய அரசு, மாநில அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் பணிபுரிந்த அனுபவம் இவருக்கு உள்ளது. இவர் இந்தியாவில் சமூக இயக்கங்கள், பாலினம் கட்டுமானம், மத மற்றும் கலாச்சார அம்சங்கள் மற்றும் பெண்கள் இயக்கங்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் பங்களித்துள்ளார். இவர் கற்பித்தல் மற்றும் கற்றல் நடைமுறைகள், வகுப்பறை, பல்கலைக்கழக கட்டமைப்புகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச தொழில்முறை அமைப்புகள் மூலம் அதன் மறுசீரமைப்பு ஆகியவை குறித்து உரையாடுகிறார். 2019 ஆம் ஆண்டில்,பாலின உணர்திறன் மற்றும் பாலின மேம்பாட்டுத் திட்டங்களுக்கான தேசிய வள நபராக புதில்லியில் உள்ளதேசிய பெண்கள் ஆணையம் இவரை அறிவித்தது. [3]

சான்றுகள்[தொகு]

  1. Thomas, Ashish. "Prof. Rekha Pande to be NCW's National Resource Person" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-07.
  2. "Women's World Congress in 2014".
  3. "The Hans India HYDERABAD MAIN epaper dated Mon, 16 Sep 19". epaper.thehansindia.com. Archived from the original on 2020-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-10-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேகா_பாண்டே&oldid=3569952" இலிருந்து மீள்விக்கப்பட்டது