ரேகா குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரேகா குப்தா (Rekha Gupta) இந்தியாவின் தில்லியைச் சேர்ந்த பாரதீய சனதா கட்சியின் தலைவர் ஆவார். தில்லி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் பொதுச் செயலாளராகவும் தலைவராகவும் இருந்துள்ளார். பாரதீய சனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலும் கட்சியின் தில்லி மாநில ஒன்றியத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.

1996-1997 ஆம் ஆண்டில் இவர் தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவரானார். 2007 ஆம் ஆண்டில் உத்தரி பிடம்புரா (வார்டு 54) இல் இருந்து தில்லி கவுன்சிலர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 2012 ஆம் ஆண்டில் உத்தரி பிடம்புராவில் (வார்டு 54) இருந்து இதே பதவிக்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rekha Gupta ::A proud Indian:: ||Political Profile||".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேகா_குப்தா&oldid=3688840" இலிருந்து மீள்விக்கப்பட்டது