ராண்டி அல்ட்சுல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராண்டி அல்ட்சுல்
பிறப்புராண்டிஸ்-லிசா அல்ட்சுல்
1960 (அகவை 63–64)
கிளிஃப்சைட் பூங்கா, நியூ செர்சி
தேசியம்அமெரிக்கர்
பணிகண்டுபிடிப்பாளர்
அறியப்படுவதுஒருமுறை பயன்படுத்தும் செல்லிட கைபேசியைக் கண்டுபிடித்தவர்

ராண்டிஸ்-லிசா "ராண்டி" அல்ட்சுல் ( Randice-Lisa "Randi" Altschul ) (பிறப்பு 1960) நியூ செர்சியிலுள்ள கிளிஃப்சைட் பூங்காவில் உ ள்ள ஒரு அமெரிக்க பொம்மை கண்டுபிடிப்பாளரும் மற்றும் மேம்பாட்டாளரும் ஆவார். சிறிய தொழில்நுட்ப பயிற்சி அல்லது பொறியியல் அறிவுடன், இவர் பொம்மைகள் மற்றும் பலகை விளையாட்டுகளை உருவாக்கினார். அது பெரும் வெற்றியைக் கண்டது. இதன் விளைவாக, தனது 26 வயதிற்குள் கோடீஸ்வரரானார்.

இவரது பலகை விளையாட்டான மியாமி வைஸ், அதே பெயரில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பட்டது. பின்னர் ராக்ஸ்டார் நோர்த் என்ற பிரித்தானிய காணொளி விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம் மூலம் கிராண்ட் தெப்ட் ஆட்டோ: வைஸ் சிட்டி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இது 2002 இல் அதிகம் விற்பனையாகும் காணொளி விளையாட்டுகளில் ஒன்றாக மாறியது. பொம்மைத் துறையில் இவர் வெற்றி பெற்ற பிறகு, டைஸ்லேண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் ஒருமுறை பயன்படுத்தும் செல்லிடத் தொலைபேசியைக் கண்டுபிடித்தார். 2008 இல் கேத்லீன் சக்புடிசு என்பவருடன் இணைந்து சாரி, யு கான்ட் என்டர் ஹெவன் என்ற புதினத்தையும் எழுதியுள்ளார்.

ஆரம்பகால தொழில்/பொம்மை கண்டுபிடிப்பாளர்[தொகு]

பொம்மைகள் மற்றும் விளையாட்டுகளில் இவரது முதல் வெற்றி இருந்தது. இவரது முதல் யோசனை ' மியாமி வைஸ்' விளையாட்டாகும். இது அதே பெயரில் அமெரிக்க தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டு வெற்றி பெற்றது. மற்ற குறிப்பிடத்தக்க பொம்மைகள் மற்றும் விளையாட்டுகளில் பார்பியின் 30வது பிறந்தநாள் விளையாட்டு மற்றும் துணி அடைத்த ஆகியவை அடங்கும். இவர் ஒரு அரக்க வடிவ காலை உணவு தானியத்தையும் உருவாக்கினார். அது பாலினால் மூடப்படும்போது போது மென்மையாக மாறும். டீனேஜ் மியூட்டன்ட் நிஞ்ஜா டர்டில்ஸ் மற்றும் தி சிம்ப்சன்ஸ் போன்ற பிற பிரபலமான அமெரிக்க தொலைக்காட்சித் தொடர்களுடனான விளையாட்டுகளுக்கான தனது யோசனைகளை விற்பனை செய்ததன் மூலம் அல்ட்சுல் அதிகம் பணம் சம்பாதித்தார். சிறுவயதிலேயே பணக்காரர் ஆன இவர் இலாபத்தின் ஒரு பகுதியை மெல்லிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்தார்.[1]

ஒருமுறை உபயோகித்து வீசும் முதல் செல்லிடத் தொலைபேசி[தொகு]

அல்ட்சுல் தனது கைபேசிக்கான இணைய இணைப்பை அடிக்கடி இழந்தார். தன்னிடமிருந்த விலையுயர்ந்த செல்லிடத் தொலைபேசியை அப்புறப்படுத்தும் ஒரு யோசனையும் இவருக்கு ஏற்பட்டது. தன்னைப் போனறே இணைய இணைப்பை இழப்பவர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் செல்லிடத் தொலைபேசி உதவக்கூடும் என்பதை உணர்ந்தார்.[2] தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தான் திட்டமிட்ட செல்லிடத் தொலைபேசியை உருவாக்க டைஸ்லான்ட் டெக்னாலஜிஸ் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கினார்.[1]

நவம்பர் 1999 இல், அல்ட்சுல் டைகோவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான மூத்த துணைத் தலைவர் லீ வோல்டேவுடன் இணைந்து ஒருமுறை உபயோகித்து வீசும் முதல் செல்லிடத் தொலைபேசியை உருவாக்கினார். அவர்களின் தயாரிப்பு ஃபோன்-கார்டு-ஃபோன் என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் அது ஒரு செல்லிடத் தொலைபேசியின் அளவு கால் அங்குல தடிமனுக்கும் குறைவாக இருந்தது. மேலும், மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தை அடிப்படையாகக் கொண்ட பொருட்களால் ஆனது. செல்லிடத் தொலைபேசியில் ஒரு சில்லு இருந்தது. அதன் உரிமையாளர்கள் பொருட்களை வாங்குவதற்கும் அதை கடன் அட்டையாகப் பயன்படுத்துவதற்கும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். செல்லிடத் தொலைபேசி சுமார் $20 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. அதை ஒரு மணிநேரம் வரை பயன்படுத்த முடியும். பயன்பாட்டிற்குப் பிறகு செல்லிடத் தொலைபேசியைத் திருப்பித் தருபவர்கள் இரண்டு முதல் மூன்று டாலர்கள் வரை பெறுவார்கள். 2002 இல், ஃபோன்-கார்டு-ஃபோன் புரோஸ்ட் மற்றும் சல்லிவன் ஆகியோரால் "ஆண்டின் சிறந்த தயாரிப்பு" என்று பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Bellis, Mary. "Disposable Cell Phone - Phone-Card-Phone". Archived from the original on July 9, 2012. பார்க்கப்பட்ட நாள் 8 March 2014. {{cite web}}: Check |url= value (help)
  2. Randice Altschul பரணிடப்பட்டது 2014-02-18 at the வந்தவழி இயந்திரம், csupomona.edu, retrieved 14 March 2014

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராண்டி_அல்ட்சுல்&oldid=3903346" இலிருந்து மீள்விக்கப்பட்டது