ராக்ஸ்பர்க்ஸ் செர்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராக்சுபர்க்சு செர்ரி (Eugene Rocksberg) என்பது ஒரு தாவரத்தின் பெயர். இத்தாவரத்தின் தாவரவியல் பெயர் யூஜினியா ராக்ஸ்பர்க் ஆகும். இது மைட்ரேசியே குடும்பத்தைச் சார்ந்தது. இது இந்தியா மற்றும் இலங்கையைத் தாயகமாகக் கொண்டது.

விவரிப்பு[தொகு]

இம்மரத்தின் தண்டுப்பகுதி வட்டமான , சொரசொரப்பான பழுப்பு நிறம் கொண்டது. இது 5 மீட்டர் உயரம் வளரக் கூடியது. இலைகள் மினுமினுப்பான பச்சை நிறம் கொண்டவை. எதிரடுக்கு இலை அமைவு முறை கொண்டது. மேலும் நான்கு இதழ்களைக் உடைய வெண்மை நிற பூக்கள் கொண்டது. பழங்கள் அடர் ஆரஞ்சு நிறத்துடன் இருக்கும். இப்பழங்கள் பெர்ரி வகையைச் சார்ந்தவை. இத்தாவரம் பூக்கும் காலம் மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் இறுதியில் நிறைவடைகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராக்ஸ்பர்க்ஸ்_செர்ரி&oldid=3843844" இலிருந்து மீள்விக்கப்பட்டது