யாழ்ப் பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[1]இப்பறவையை ஆஸ்திரேலியாவின் மயில் எனக் கூறலாம். இது மிகவும் அழகாக இருக்கும். இது மெனுரிடே குடும்பத்தை சார்ந்தது. ஆண் பறவைக்கு அழகான தோகை உண்டு. தோகையின் ஓரங்களில் வெளியில் வளைந்து நீளமான இரண்டு வாலிறகுகள் யாழின் மருங்குப் பிடிகளைப் போலவும், 12 மெல்லிய இறகுகள் யாழின் நரம்புகளைப் போல அமைந்துள்ளது. வான் கோழியை விட சற்று சிறியது. ஆனால் நீண்ட தோகை உடலைப் போல் 4 அல்லது 5 மடங்கு நீளமுடையது. நல்ல கரும் ஆரஞ்சு நிறமுடைய உடலில் ஆங்காங்கே கருஞ்சிவப்பு தட்டுகள் காணப்படும். தோகை இறகுகளின் நிறம் பச்சையாகவும் நீளமாகவும் காணப்படும். பெண் யாழ்ப் பறவைக்கும் தோகை உண்டு. ஆனால் ஆண் தோகையைப் போல் அழகல்ல. மிகுந்த உயரத்தில் பறக்க முடியாது. பெரும்பாலும் நேரத்தை தரையிலேயே கழித்துவிடும். மயிலுக்கு தோகை உண்டு. ஆனால் இனிய குரலில்லை. யாழ்ப் பறவைக்கு இவை இரண்டுமே உள்ளன. மண்ணைக் கிளரி தரையில் வாழும் பூச்சிகளைத் திண்பதற்கு விரல்களும் நகங்களும் தடித்து நீண்டு உறுதியாக உள்ளன. இவை புழு, பூச்சி, அட்டை, பூரான், வண்டு, நத்தை போன்ற உயிரினங்களை உணவாக உட்கொள்கின்றன. யாழ்ப்பறவை கோழி கொக்கரைப்பது போலவும், நாய் குரைபபது போலவும் பலவகை பறவை போலவும் குரல் எழுப்பி மற்ற பறவைகளை ஏமாற்றும். காடுகள் வெட்டப்பட்டதாலும் நரிக் கூட்டங்களின் தாக்குதலாலும் குறைந்து வரும் இப்பறவையினை காக்க ஆஸ்திரேலிய அரசு சரணாலயங்களை ஏற்படுத்த வேண்டும்.

  1. அறிவியல் களஞ்சியம் - தொகுதி 18 தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு எண் 344 - நவம்பர் 2009 - பக்கம் 3. [[பகுப்பு: திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாழ்ப்_பறவை&oldid=3600905" இலிருந்து மீள்விக்கப்பட்டது