யானைக் குறுந்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யானைக் குறுந்தொட்டி எனும் இதனைக் காட்டுக்குறுந்தொட்டி என்றும் கூறுவர். சிடாராம்பிபொலியோ இதன் தாவரப்பெயர் ஆகும். இது மால்வேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இது இந்தியா, நேபாளம், தமிழகம் முழுவதும் காணப்படுகிறது. இது 1800 மீட்டர் உயரம் வரை வளரும்.

பயன்கள்[தொகு]

இதன் வேரும் இலைகளும் சிறுநீர், இதயம் சார்ந்த நோய்கள், மூலம், வீக்கங்களை குணப்படுத்த உதவுகின்றன. வேர், வாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். வயிற்றோட்டத்திற்கும் பயன் தரும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. அறிவியல் களஞ்சியம் தொகுதி பதினெட்டு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், நவம்பர் 2009, பக்கம் 11
"https://ta.wikipedia.org/w/index.php?title=யானைக்_குறுந்தொட்டி&oldid=3918402" இலிருந்து மீள்விக்கப்பட்டது