யானைக்கால் நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யானைக்கால் நோய்
Elephantiasis
பைலேரியாவினால் ஏற்படும் யானைக்கால் நோய்
சிறப்புதொற்று நோய், பொது அறுவைச் சிகிச்சை
அறிகுறிகள்தோல்வீக்கம்

யானைக்கால் நோய் (Elephantiasis) என்பது திசு வீக்கத்தின் காரணமாக கை கால் அல்லது உடல் பாகங்கள் பெரிதாகி கடினமாவது ஆகும்.[1][2] நிணநீர் நாளங்களின் அடைப்பு காரணமாக இந்நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக வீக்கம், உடல் திசு மிகை வளர்ச்சி மற்றும் தோல் மற்றும் தோலடி திசுக்களின் நார்க்கட்டி இழைமத்தடிப்பு ஏற்படுகிறது.[2] இது பிறப்புறுப்பையும் பாதிக்கலாம்.[2] யானைக்கால் நோய் என்ற சொல் பெரும்பாலும் ஒட்டுண்ணி புழு நோய்த்தொற்றுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[1][2] ஆனால் ஒரு நபரின் உடலின் பாகங்கள் பாரிய விகிதத்தில் வீங்கும் பல்வேறு நோய்களையும் இது குறிக்கலாம்.[2]

காரணம்[தொகு]

யானைக்கால் நோய் உண்டாகக் குறிப்பிடப்பட்டுள்ள சில நிபந்தனைகள் பின்வருமாறு:

  • எலிபான்டியாசிசு நாசுட்ராசு, நீண்டகால நாட்பட்ட நிணநீர் அழற்சியின் காரணமாக
  • எலிபான்டியாசிசு டிராபிகா (நிணநீர் பைலேரியாசிசு என அழைக்கப்படுகிறது), இது பல ஒட்டுண்ணி புழுக்களால் ஏற்படுகிறது. குறிப்பாக வூச்செரேரியா பான்கிராப்டி . இந்நோயினால் 120 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.[3]
  • பைலேரியல் அல்லாத யானைக்கால் நோய் (அல்லது போடோகோனியோசிசு), நிணநீர் நாளங்களைப் பாதிக்கும் நோய் எதிர்ப்பு நோய்[4]
  • லெஷ்மேனியாசிஸ்[2]
  • யானைக்கால் நோய், வகை 3 நிணநீர் தேக்க வீக்கம். இது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படக்கூடும்[5]
  • பிறப்புறுப்பு யானைக்கால் நோய், லிம்போகிரானுலோமா வெனிரியத்தின் (அரையாப் புக் கட்டி) விளைவு[6]
  • "யானை மனிதன்" என்று அழைக்கப்படும் ஜோசப் மெரிக் நிலை என அறியப்படும் ஒரு மரபணுக் கோளாறு, புரோட்டசு நோய்க்குறி[7]

பிற காரணங்கள்:

  • தொடர் இசுடெரெப்டோகாக்கால் தொற்று[2]
  • லிம்பேடெனெக்டோமி[2]
  • பரம்பரை பிறப்பு குறைபாடுகள்[2]
  • தைராய்டு குறை கால்முன் எலும்பு நீர்க்கட்டு

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Definition of ELEPHANTIASIS". www.merriam-webster.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-28.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 "elephantiasis", The Free Dictionary, பார்க்கப்பட்ட நாள் 2018-06-28
  3. Carlson, Emily (27 March 2013). "Taking the 'Bite' Out of Vector-Borne Diseases - Inside Life Science Series - National Institute of General Medical Sciences". publications.nigms.nih.gov. Archived from the original on 28 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 29 November 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Podoconiosis: endemic non-filarial elephantiasis". World Health Organization. Archived from the original on April 28, 2016. பார்க்கப்பட்ட நாள் March 20, 2018.
  5. "Lymphedema". National Cancer Institute. 29 May 2015. பார்க்கப்பட்ட நாள் 29 November 2016.
  6. Rapini, Ronald P.; Bolognia, Jean L.; Jorizzo, Joseph L. (2007). Dermatology: 2-Volume Set. St. Louis: Mosby. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4160-2999-1. 
  7. James, William; Berger, Timothy; Elston, Dirk (2005). Andrews' Diseases of the Skin: Clinical Dermatology (10th ). Saunders. பக். 554. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7216-2921-6. 

வெளி இணைப்புகள்[தொகு]

வகைப்பாடு
வெளி இணைப்புகள்
  • "Lymphatic filariasis". World Health Organization. பார்க்கப்பட்ட நாள் 1 June 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யானைக்கால்_நோய்&oldid=3669884" இலிருந்து மீள்விக்கப்பட்டது