மௌனகுரு முத்துச்சாமி சுவாமிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மௌனகுரு முத்துச்சாமி சுவாமிகள் என்பது ம. ரெட்டியபட்டியில் சமாதியடைந்த சித்தராவார்.[1] இவர் பொற்கொல்லர் சமூகத்தை சேர்ந்தவர். ஞானத் தேடலுக்காக பொற்கொல்லர் தொழிலை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு யோகப் பயிற்சிகளை செய்தார். ம. ரெட்டியபட்டியில் உள்ள கண்மாய்க் கரையில் ஆலமரத்தடியில் தியானம் செய்துள்ளார்.[1] அவ்விடத்திற்கு அருகே உள்ள மூதாட்டி தன்னுடைய தோட்டத்தில் ஒரு பங்கினை தானமாக தந்தார். அந்த இடத்தில் ஊர்மக்கள் குடிசை அமைத்து தந்தனர்.[1]

மக்களுக்கு திருநீறு தந்து ஆசி வழங்குவார். அந்த திருநீரே எல்லாவற்றுக்கும் மருந்துபோல மக்களின் பிணிகளைத் தீர்த்து. ஓர் நாள் தான் சமாதியடையும் நாளை பக்தர்களுக்கு தெரிவித்தார்.[1] 1938ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் நாள் வெள்ளிக் கிழமையன்று கிருஷ்ணபட்ச அமாவாசசையில் சமாதியடைந்தார்.[1] அன்று உத்திர நட்சத்திரமாகும். இந்த சமாதிப் பீடத்தில் சிவலிங்க பிரதிஸ்டை செய்து வழிபடுகின்றனர்.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 சித்தர்கள் அறிவோம்: ஊமை எழுத்தே உயிராச்சு- தவத்திரு மௌனகுரு முத்துச்சாமி சுவாமிகள் எஸ்.ஆர்.விவேகானந்தம்