மௌசுமி கந்தாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மௌசுமி கந்தாலி
பிறப்புஅசாம், இந்தியா
தொழில்எழுத்தாளர், கலை வரலாறாசிரியர், கல்வியாளர்
தேசியம்இந்தியர்
வகைஅசாமிய இலக்கியம்
கருப்பொருள்சமகால இலக்கியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • லம்படா நாச்சோர் சேஷோட்
  • திரிதியோட்டோர் கோல்போ
  • மாக்ட்ரில்
  • பிளாக் மேஜிக் பெண்கள்
குடும்பத்தினர்
  • சுவப்னர்கா அர்ணன் (மகன்)
  • குதீந்திர நாத் கண்டலி (தந்தை)
  • தாருலதா கண்டலி (அம்மா)
  • மோனிமலா கண்டலி (சகோதரி)
  • மல்லிகா கண்டலி (சகோதரி)

மௌசுமி கந்தாலி (ஆங்கிலம்: Moushumi Kandali; அசாமிய மொழி: মৌচুমী কন্দলী) இந்தியாவின் அசாமைச் சேர்ந்த எழுத்தாளர், வரலாற்றாசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார்.[1][2] இவர் 1998-இல் தனது முதல் சிறுகதைத் தொகுப்பான லம்படா நாச்சோர் சேஷோட்சை வெளியிட்டார். இந்நூலுக்கு 2000ஆம் ஆண்டில் முனின் பர்கடாகி விருது வழங்கப்பட்டது. இவர் புனைகதை மற்றும் கலையின் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர். அசாமில் உள்ள தேஜ்பூர் பல்கலைக்கழகத்தில் கலாச்சார ஆய்வுகள் துறையில் உதவி பேராசிரியராகவும் இவர் பணிபுரிகிறார். [3]

இளமை[தொகு]

மௌசுமி கந்தாலி குவகாத்தியில் உள்ள காட்டன் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1998-இல், கவுஹாத்தி பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கத்துடன் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் பரோடாவில் உள்ள எம். எசு. பல்கலைக்கழகத்தில் கலை வரலாறு மற்றும் அழகியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். இதே பல்கலைக்கழகத்தில் நுண்கலை துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.[3]

தொழில்[தொகு]

கந்தாலி சால்வடார் டாலியின் டைரி ஆப் எ ஜீனியசை அசாமிய மொழியில் மொழிபெயர்த்தார். மிசிங் நாட்டுப்புறக் கவிதைகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார். இது 2008-இல் சாகித்திய அகாத்மியால் வெளியிடப்பட்டது.[4] 2022-இல், அவரது கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு, தி பிளாக் மேஜிக் வுமன் வெளியிடப்பட்டது.[5][2][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Interview with Dr. Moushumi Kandali on her book 'The Black Magic Women'". Frontlist.in. 23 April 2022. பார்க்கப்பட்ட நாள் 20 May 2023.
  2. 2.0 2.1 Sangeeta Barooah Pisharoty (25 June 2022). "Assam, the Myth of Black Magic Women and Its Relevance Today". Thewire.in. பார்க்கப்பட்ட நாள் 20 May 2023.
  3. 3.0 3.1 "Moushumi Kandali". Tezpur University. பார்க்கப்பட்ட நாள் 30 April 2022.
  4. "ART of being". www.thehindu.com. 14 August 2013. பார்க்கப்பட்ட நாள் 12 May 2023.
  5. "The Black Magic Women (Stories from North-east India)". penguin.co.in. பார்க்கப்பட்ட நாள் 12 May 2023.
  6. Soumitra Das (15 May 2022). "Weaving a Spell". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 20 May 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌசுமி_கந்தாலி&oldid=3891959" இலிருந்து மீள்விக்கப்பட்டது