மோர்டன் ஆராய்ச்சி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மோர்டன் ஆராய்ச்சி நிலையம் (Moredun Research Institute) என்பது இசுக்கொட்லாந்தில் உள்ள பெண்லேண்ட் அறிவியல் பூங்காவில் அமைந்துள்ள ஒரு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாகும். இந்நிறுவனமானது கால்நடைகளில் ஏற்படும் நோய்கள் குறித்து ஆராய்ச்சி செய்து கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் நலத்தினைப் பாதுகாப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இங்கு 200-இற்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியாற்றுகின்றனர்.[1]

வேளாண், உணவு மற்றும் கிராம சமுதாய இயக்ககம் மூலம் மோர்டன் ஆராய்ச்சி நிலையத்திற்கு இசுக்கொட்லாந்து அரசு நிதியுதவி செய்கிறது. 2010-2011 ஆம் நிதியாண்டில் இந்நிறுவனம் £7.1 மில்லியன் அளவிலான நிதி உதவியைப் பெற்றுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "National public bodies: directory". www.gov.scot (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-08.