மோதி லால் மதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மோதி லால் மதன் (Moti Lal Madan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் உயிரித்தொழில்நுட்ப ஆராய்ச்சியாளராவார். 1939 ஆம் ஆண்டு இவர் பிறந்தார்.[1] கால்நடை மருத்துவர், கல்வியாள மற்றும் நிர்வாகி என பன்முகங்களுடன் இவர் இயங்கினார்.

1994 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை கர்னலில் உள்ள தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக (ஆராய்ச்சி) மதன் பணியாற்றினார், பின்னர் 1995 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் பொது துணை இயக்குநராக (விலங்கு அறிவியல்) இருந்தார். நவம்பர் 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மதுராவில் உள்ள பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார். முன்னதாக இவர் அகோலாவிலுள்ள டாக்டர் பஞ்சப்ராவ் தேசுமுக் கிருசி வித்யாபீடத்தில் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார். [2]

மதன் பன்னாட்டுப் பத்திரிகைகள் உட்பட குறைந்தபட்சம் 188 கல்வியியல் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். [3]

1987 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை மதன் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் கரு பரிமாற்ற தொழில்நுட்பத்தின் திட்ட இயக்குநராகப் பணியாற்றினார். [3] 1990 ஆம் ஆண்டு நவம்பரில் "பிரதம்" என்ற கன்றின் பிறப்புக்கு வழிவகுத்த எருமையின் முதல் வெற்றிகரமான செயற்கை முறை கருத்தரிப்பை நிகழ்த்திய ஓர் ஆய்வுக் குழுவை மதன் வழிநடத்தினார்

ஒன்ராறியோ கால்நடை மருத்துவக் கல்லூரியின் கோடைக்கால மாநாட்டில், 2012 ஆம் ஆண்டு சூன் மாதம் 12 அன்று கனடாவின் ஒன்ராறியோ குயல்ப் பல்கலைக்கழகத்தில் மதனுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. [4] ஒன்ராறியோ கால்நடை மருத்துவக் கல்லூரியிலும் மதன் ஒரு கருத்தரங்கை நிகழ்த்தினார். [5] மற்றும் அந்நாட்டு குடியரசுத் தலைவருடன் உரையாடலில் பங்கேற்றார். [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.naasindia.org/fdetail.html#M001
  2. Gupta, Yoginder (2006-11-11). "Madan takes over as VC of vet varsity". The Tribune. http://www.tribuneindia.com/2006/20061112/haryana.htm#9. பார்த்த நாள்: 2007-08-14. 
  3. 3.0 3.1 "Alumni Association of NDRI-SRS: Illustrious Alumni". Alumni Association of the Southern Regional Station of National Dairy Research Institute. Archived from the original on 2004-07-21. பார்க்கப்பட்ட நாள் 2007-03-15."Alumni Association of NDRI-SRS: Illustrious Alumni". Alumni Association of the Southern Regional Station of National Dairy Research Institute. Archived from the original பரணிடப்பட்டது 2004-07-21 at the வந்தவழி இயந்திரம் on 2004-07-21. Retrieved 2007-03-15.
  4. http://www.uoguelph.ca/news/2012/06/ten_to_receive.html
  5. http://bulletin.ovc.uoguelph.ca/post/24894739433/seminar-explores-animal-reproductive-technology-in
  6. http://bulletin.ovc.uoguelph.ca/post/23558685795/presidents-dialogue-examines-challenge-of-feeding

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோதி_லால்_மதன்&oldid=3523059" இலிருந்து மீள்விக்கப்பட்டது