மை சுரப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மை சுரப்பியின் அமைப்பு

மை சுரப்பி (Ink Gland) அல்லது மை பை (Ink sac) என்பது மெல்லுடலிகளில் தலைக்காலிகளில் உடற்கூறியல் அம்சமாகும். இது தற்காப்பு பணியினை இந்த மெல்லுடலிகளுக்கு வழங்குகிறது. பல தலைக்காலி மெல்லுடலிகளில் மை சுரப்பி காணப்படுகிறது. இரவு நேர மற்றும் மிக ஆழமான நீரில் வாழும் தலைக்காலிகளைத் தவிர, ஒளி நிறைந்த பகுதியில் வாழும் அனைத்து கோலியோடியா (கணவாய், ஆக்டோபசு மற்றும் தோட்டுக்கணவாய்) மை சுரப்பியினைக் கொண்டுள்ளன. இது வேட்டையாடும் விலங்குகளைக் குழப்பும் வகையில் கருமையான மையினை நீரில் வெளியேற்றி மறைந்து தப்பிக்க பயன்படுகிறது.[1]

மை சுரப்பியானது தசைக் குழாயின் நீட்டிப்பாக உருவான பை வடிவிலான சுரப்பியாகும். இது ஒரு மாற்றமடைந்த செவுளடிச் சுரப்பியாகும்.[2] இது குடலுக்குக் கீழே காணப்படும் இந்தச் சுரப்பி மலப்புழை திறக்கிறது. இந்த மைச் சுரப்பியின் சுரப்பு பொருளில் மெலானின் உள்ளது. இந்த மை சுரப்பி, புனலின் அடிப்பகுதியில் அமைந்த அதன் ஜெட் உந்துவிசையைப் பயன்படுத்துவதால், மை நீரில் வெளியேற்றப்படுகிறது.[1] மை வெளியேற்றப்பட்ட நீரானது தெளிவற்றுக் காணப்படுவதால் வேட்டை விலங்குகளின் கவனத்தினை திசை திருப்பு மையினை வெளியேற்றும் விலங்கு தப்பித்துக்கொள்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Boyle, Peter; Rodhouse, Paul (2004). Cephalopods : ecology and fisheries. Ames, Iowa: Blackwell. doi:10.1002/9780470995310.ch2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-632-06048-4. https://books.google.com/books?id=4UtCi2B4VnoC. 
  2. Nair, J.R., D. Pillai, S.M. Joseph, P. Gomathi, P.V. Senan & P.M. Sherief (2011). "Cephalopod research and bioactive substances" (PDF). Indian Journal of Geo-Marine Sciences 40(1): 13–27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மை_சுரப்பி&oldid=3689085" இலிருந்து மீள்விக்கப்பட்டது