மைக், தலையில்லாத கோழி
மைக் | |
---|---|
ஏனைய பெயர்(கள்) | மைக், தலையில்லாத கோழி, அதிசய மைக் |
இனம் | Gallus gallus domesticus |
வகை | Wyandotte |
பால் | ஆண் |
பிறப்பு | ஏப்ரல் 1945 |
இறப்பு | மார்ச்சு 1947 போனிக்ஸ், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா, |
உரிமையாளர் | லில்யாட் ஒல்சன் |
மைக், தலையில்லாத கோழி (ஏப்ரல் 1945 – மார்ச்சு 1947), என்பது அதிசய மைக்,[1] ஒரு Wyandotte வகை கோழியாகும். இது தலை துண்டிக்கப்பட்டபின்னரும் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்தது. இதன் உரிமையாளர் இந்த அதிசயத்தை நிரூபிக்க உத்தாக் பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் சென்றார்.
தலை துண்டிப்பு
[தொகு]செப்டம்பர் 10, 1945, அன்று லில்யாட் ஒல்சன் என்ற விவசாயியின் வீட்டிற்கு அவரது மாமியார் வந்திருந்தார். இரவு உணவுக்காக அவரது மனைவி அவரை தோட்டத்துக்கு அனுப்பி ஒரு கோழியைப் பிடித்து வரச்சொன்னார். ஒல்சன் 5 1/2 மாத மைக் என்னும் சேவலைப் பிடித்து கோடாரியால் வெட்டினார். வெட்டும்போது பெரும்பாலான மூளைச்செல்கள் செயலிழந்தன. ஆனால் கழுத்து சிரை சேதமடையவில்லை.[2][3]
கழுத்தை வெட்டிய பின்னரும் மைக் நின்றுகொண்டே இருந்தது. அதனால் நடக்க முடிந்தது. உணவைத் தேடியது. கூவியது.[2]
மைக் சாகாததால் அதைப் பாராமரிக்க ஒல்சன் முடிவெடுத்தார். தண்ணீருடன் பாலையும், சிறு சிறு உணவு தானியங்களையும் கொடுத்தார்.[2]
புகழ்
[தொகு]மைக்கின் புகழ் நாடெங்கும் பரவியது. ஒல்சன் பல இடங்களுக்கு காட்சிக்கு மைக்கை கூட்டிச் சென்றார். புகழ்பெற்ற "டைம்" மற்றும் "லைப்" பத்திரிக்கைகளுக்காக படம்பிடிக்கப்பட்டார்.[2]
மைக்கை பார்க்க 25 சென்ட் வசூக்கப்பட்டது. அதன் மூலம் மாதம் 4500 (மே, 2015ல் 47,500)அமெரிக்க டாலர்களை சம்பாதித்தார் ஒல்சன். சேவலின் மதிப்பு 10,000 டாலர்கள் என மதிப்பிடப்பட்டது.[2]
இறப்பு
[தொகு]மார்ச்சு, 1947ல் ஒல்சன் ஃபீனிக்சில் உள்ள ஒரு நெடுஞ்சாலை உணவகத்தில் தங்கியிருந்தார். மைக்கிற்கு உணவு கொடுக்கும் சாதகங்களை அவர் காட்சிக்கூடத்தில் மறந்துவிட்டிருந்தார். உணவு கொடுக்கமுடியாததால் மைக் இறந்தது.
பிரேத பரிசோதனை
[தொகு]கழுத்து சிரை பாதிப்படையவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூளையில் இருந்த ஒரு கட்டி இரத்தப்போக்கை தடுத்திருந்தது. பெரும்பகுதி மூளையுடன் இருந்தது. அடிப்படை வேலைகளைச் செய்ய உதவும் மூளைப்பகுதி பாதிப்படையவில்லை.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Mike's Story". Mike the Headless Chicken. 2007. பார்க்கப்பட்ட நாள் 2012-05-28.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Lloyd, John; Mitchinson, John (2006). The Book of General Ignorance. Faber and Faber. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-571-23368-6.
- ↑ "The Rooster". Time Inc. 1945-10-29. Archived from the original on 2009-01-31. பார்க்கப்பட்ட நாள் 2008-11-13.
மேற்கோள்கள்
[தொகு]- Amy Reiter (1999). "Mike the Headless Chicken more popular than Clinton". Salon. http://www.salon.com/people/col/reit/1999/05/12/snl/index.html. பார்த்த நாள்: 2008-03-08.
- Charles Furneaux, executive producer; Gregory Diefenbach, producer; Mark Lewis, producer.The Natural History of the Chicken[Video].PBS Home Video.Retrieved on 2013-10-11. பரணிடப்பட்டது 2014-07-01 at the வந்தவழி இயந்திரம்
- Silverman, Steve (2001). Einstein's Refrigerator: And Other Stories from the Flip Side of History. Kansas City, Missouri: Andrews McMeel Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7407-1419-8.
வெளி இணைப்புகள்
[தொகு]- Mike the Headless Chicken.org
- Mike the Headless Chicken பரணிடப்பட்டது 2009-01-05 at the வந்தவழி இயந்திரம்
- Mike the Headless Chicken பரணிடப்பட்டது 2012-07-02 at the வந்தவழி இயந்திரம்
- Mike the Headless Chicken