மெய்மையியம் (கலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மெய்மையியம் என்பது, அலங்காரமோ, விளக்கமோ இன்றி உலகில் அன்றாட வாழ்வில் காண்பவற்றை அப்படியே காண்கலைகளிலோ, இலக்கியத்திலோ எடுத்துக் காட்டுவதைக் குறிக்கும். இது, உண்மையை எடுத்துக் காட்டும் நோக்கில் அருவருப்பு, இழிந்தநிலை ஆகியவற்றை உள்ளடக்கும் படைப்புக்களையும் குறிக்கக்கூடும். மெய்மையியம் என்பது 1850 களில் பிரான்ஸ் நாட்டில் உருவான ஒரு கலை இயக்கத்தையும் குறிக்கும்.

நிழற்படங்களின் அறிமுகத்துடன் மெய்மையியத்தின் புகழ் வளர்ச்சியடைந்தது. மெய்மையியத்தினர் 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் பிரான்சிய இலக்கியத் துறையில் முன்னணியில் இருந்த புத்தார்வக் கற்பனையியத்துக்கு எதிரானவர்களாக இருந்தனர். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களால் பாதிக்கப்படாத மெய்மையியம் புறநோக்கு உண்மைக் (objective reality) கொள்கையில் நம்பிக்கை கொண்டது. உண்மையும், துல்லியமும் பல மெய்மையியத்தினரின் குறிக்கோளாக இருந்தது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மெய்மையியம்_(கலை)&oldid=1372206" இருந்து மீள்விக்கப்பட்டது