மூலூயிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூலூயிட்டு
Moolooite
பெரிய நீலநிற மூலூயிட்டு (காட்சியின் புலம் 12 மிமீ)
பொதுவானாவை
வகைஆக்சலேட்டு கனிமம்
வேதி வாய்பாடுCu(C2O4) · 0.4H2O
இனங்காணல்
நிறம்பச்சை
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
ஒப்படர்த்தி3.43 (கணக்கிடப்பட்டது)
அடர்த்தி2.6
மேற்கோள்கள்[1]

மூலூயிட்டு (Moolooite) என்பது Cu++(C2O4)·n(H2O) (n<1) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அரிய நீலப்பச்சை நிறத்தில் காணப்படும் இக்கனிமம் தாமிர ஆக்சலேட்டு நீரேற்று கனிமம் என்று வகைப்படுத்தப்படுகிறது. 1986 ஆம் ஆண்டு மேற்கு ஆத்திரேலியாவில் இரிச்சர்ட்டு எம் கிளார்க் மற்றும் இயன் ஆர் வில்லியம்சு ஆகியோரால் பன்பரி வெல், மூலூ டவுன்சு நிலையம், முர்ச்சிசனில் கண்டுபிடிக்கப்பட்டது.[2] மூலூயிட்டு நேர்சாய்சதுரக் கட்டமைப்பில் படிகமாகிறது. உரமாகப் பயன்படும் கடற் பறவைகளின் எச்சம் மற்றும் சூழ்நிலைச் சிதைவுக்கு உட்பட்ட தாமிர சல்பைடு ஆகியவற்றின் தொடர்பால் இக்கனிமம் உருவாகிறது. நீலப் பச்சை நிறத்தில் நெகிழிகள் தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது.

இரண்டாவதாக பிரான்சு நாட்டில் வோசுகசு மலைகளில் உள்ள செயிண்டு மேரி ஆக்சு சுரங்கத்தின் வெள்ளி சுரங்க மாவட்டத்தில் இது கிடைக்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலூயிட்டு&oldid=3761440" இலிருந்து மீள்விக்கப்பட்டது