மு. பாலசுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிஞர் மு.பாலசுப்பிரமணியன்

மு. பாலசுப்பிரமணியன் புதுவையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முனுசாமி - காளியம்மாள் தம்பதியரின் மூத்த மகனாவார். புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றும் இவர் புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளருமாவார்.1 புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

இலக்கியத்துறையில்[தொகு]

பரிதியன்பன் என்னும் புனைபெயரில் எழுதி வருகிறார். நடைவண்டி சிறுவர் கலை இலக்கியக் கழகம் என்ற ஓர் அமைப்பையும் நிறுவி நடத்தி வருகிறார். நாளிதழ்களுக்கும் மாத இதழ்களுக்கும் படைப்புகள் வழங்கும் இவர் மேடைப் பேச்சாளருமாவார்.

படைப்புகள்[தொகு]

  1. வாழப்பிறந்தோம் (புதுக்கவிதைத்தொகுப்பு) 2006
  2. நடைவண்டி (சிறுவர்பாடல்கள்) 2005.
  3. அரைக்கீரை விற்கிறான் அம்பானி (ஹைக்கூத்தொகுப்பு) 2008.
  4. வெள்ளைத் திமிர் (கவிதைத்தொகுப்பு) 2010
  5. சிட்டுக்குருவி (சிறுவர்பாடல்கள்) 2010
  6. மானாவாரி (கவிதைகள்) 2011
  7. கொதிக்கும் பூமி (கவிதைகள்) - 2014
  8. அன்னப் பறவை (சிறுவர்பாடல்கள்) 2014
  9. பாட்டரங்கில் பாலா (கவியரங்கக் கவிதைகள்) (அச்சில்) 2015
  10. ஜெயந்தி நாற்பது (அச்சில்) 2015


சென்னைக் கம்பன் கழகத் தமிழ்நிதி விருது 2014

பெற்ற விருதுகள்[தொகு]

  1. சென்னைக் கம்பன் கழகத்தின் தமிழ்நிதி விருது 2014.
  2. மூவொரு அறக்கட்டளை - சிறந்த புதுக்கவிதை நூலுக்கான விருது.
  3. தமிழ்க்கலைமன்றம் வழங்கிய, கவிஞர் தமிழ்ஒளி இலக்கிய விருது, 2009.
  4. மக்கள் கலைக்கழகம் வழங்கிய எழுச்சிக்கவி விருது. 2008.
  5. புலவர் அரிமதி தென்னகனார் விருது 2007.
  6. மீறல் இலக்கிய அமைப்பு வழங்கிய, பாரி விருது 2007.
  7. புதுச்சேரி அரசின் கம்பன் புகழ் இலக்கியப் பரிசு 2006
  8. புதுச்சேரி அரசின் நேரு குழந்தை இலக்கியப் பரிசு 2006.

மேற்கோள்கள்[தொகு]

  1. தினமணி செய்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._பாலசுப்பிரமணியன்&oldid=3533107" இலிருந்து மீள்விக்கப்பட்டது