முருகேசு சந்திரகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முருகேசு சந்திரகுமார்
நாடாளுமன்ற பிரதிக்குழுத்தலைவர்
நாடாளுமன்ற உறுப்பினர்
for யாழ்ப்பாணம்
பதவியில்
2010–2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 3, 1964 (1964-08-03) (அகவை 59)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்ஊடகவியலாளர்

முருகேசு சந்திரகுமார் (Murugesu Chandrakumar, பிறப்பு: ஆகத்து 3 1964), இலங்கை அரசியல்வாதி. இவர் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சைக்குழுவின் சார்பில் போட்டியிட்டு யாழ்ப்பாண மாவட்டத்துக்கான உறுப்பினராக முதற்தடவையாக தெரிவு செய்யப்பட்டார். பின்னர், 2010 தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து இரண்டாவது தடவையாகத் தெரிவு செய்யப்பட்ட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பளை, இயக்கச்சியில் பிறந்தவர். திருநகர் வடக்கு, கிளிநொச்சியில் வசிக்கும் இவர், ஓர் ஊடகவியலாளர். 1980களின் முற்பகுதியில் ஈழமக்கள் புரட்சிகர மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து போராளியான இவர் வன்னி மாவட்டத்திற்கான பொறுப்பாளராக அந்த இயக்கத்தின் சார்பில் பதவி வகித்தவர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முருகேசு_சந்திரகுமார்&oldid=3481092" இலிருந்து மீள்விக்கப்பட்டது