மும்பை பரவர் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழகத்தின் தென்‌கோடி கடற்கரை வாழ் பரதகுல மக்களின் நலனிற்கென மும்பையில் 2000ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நற்பணி அமைப்பு மும்பை பரவர் சங்கம் ஆகும். இச்சங்கத்தின் தற்போதை‌ய தலைவர் பிரபல தொழிலதிபர் திரு. அல்பர்ட் ராயன், செயலாளர் திரு. ராஜா வாயிஸ் மற்றும் பொருளாளர் திருமதி மெர்லின் ஃபர்ணான்டோ ஆகியோர் ஆவார்.

மும்பை பரவர் சங்கத்தின் துணைத்தலைவர்களாக திரு. டோம்பிவிலி அந்தோனிசாமி, திரு. கார்மல் ஃபர்ணான்டோ ஆகியோரும் இணைச்‌செயலாளர்களாக திரு. புன்னை அந்தோனிசாமி, திரு. பென்னட் ஃபர்ணான்டோ ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

மும்பை பரவர் சங்கத்திலிருந்து பரவர் குரல் என்ற தமிழ் மாத இதழ் 2000 ஆம் ஆண்டிலிருந்து ‌‌‌வெளி வந்து கொண்டிருக்கிறது. அதிக காலம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் குறிப்பிடத்தக்க ஒரு சமுதாய இதழ் பரவர் குரல். இதன் ஆசிரியர் மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் திரு. ராஜா வாயிஸ் ஆவார். திருமதி மெர்லின் ஃபர்ணான்டோ, திரு. புன்னை அந்தோனிசாமி மற்றும் திரு. பென்னட் ஃபர்ணான்டோ ஆகி‌யோர் பரவர் குரல் ஆசிரியர் குழுவில் பணியாற்றுகின்றனர்.

மும்பை பரவர் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி தனது ஆண்டு விழாவை மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகிறது. மும்பை பரவர் சங்கத்தின் ஏற்புபெற்ற இணையதளம் ஒன்றும் இயங்கி வருகிறது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

மும்பை பரவர் சங்கத்தின் இணைய தளம் பரணிடப்பட்டது 2011-09-22 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்பை_பரவர்_சங்கம்&oldid=3225365" இலிருந்து மீள்விக்கப்பட்டது