முகமது வாகித் அசன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முகமது வாகித் அசன் Mohammed Waheed Hassan ޑރ. މުހައްމަދު ވަހީދު ޙަސަން މަނިކު |
|
|
மாலைதீவுகளின் அரசுத்தலைவர்
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 7 பெப்ரவரி 2012 |
|
| முன்னவர் | முகமது நசீது |
|---|---|
|
மாலைதீவுகளின் பிரதித்தலைவர்
|
|
| பதவியில் 11 நவம்பர் 2008 – 7 பெப்ரவரி 2012 |
|
| குடியரசுத் தலைவர் | முகமது நசீது |
| முன்னவர் | இப்ராகிம் முகமது டீடி |
| பின்வந்தவர் | எவருமில்லை |
| அரசியல் கட்சி | தேசிய ஒற்றுமைக் கட்சி |
|
|
|
| பிறப்பு | 3 சனவரி 1953 மாலே, மாலைதீவுகள் |
| வாழ்க்கைத் துணை |
இலாம் உசைன் |
| பிள்ளைகள் | விதாத் ஃபீதா சலீம் |
| பழைய மாணவர் | அமெரிக்கப் பல்கலைக்கழகம், பெய்ரூட் இசுடான்ஃபர்ட் பல்கலைக்கழகம் |
| சமயம் | இசுலாம் |
முகமது வாகித் அசன் (Mohammed Waheed Hassan, திவெயி: ޑރ. މުހައްމަދު ވަހީދު ޙަސަން މަނިކު; பிறப்பு: 3 சனவரி 1953) மாலைதீவுகளின் அரசுத்தலைவரும், மாலைதீவுகள் தேசிய பாதுகாப்புப் படையின் முதற்பெரும் படைத் தலைவரும் ஆவார். 2012 பெப்ரவரி 7 ஆம் நாள் முகமது நசீது அரசுத்தலைவர் பதவியைத் துறந்ததை அடுத்து வாகித் அசன் புதிய அரசுத்தலைவராகப் பதவியேற்றார். 2008 முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் இவர் நாட்டின் பிரதி அரசுத்தலைவராக பதவியில் இருந்தார். யூனிசெப்பின் முதுநிலை உறுப்பினராகப் பதவியில் இருந்த வாகித் அசன் கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்.