மீனு கவுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனு கவுர்
இலண்டன் பல்கலைக்கழகத்தின் எஸ்.ஓ.ஏ.எஸ்.இல் குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்களைக் கொண்டாடப்படும் வகையில் முன்னாள் மாணவர்களின் தொடரில் கவுரின் படம்
பிறப்புமீனு கவுர்
மீரட், இந்தியா[1]
கல்விசீமாட்டி சிறீ ராம் கல்லூரி
படித்த கல்வி நிறுவனங்கள்ஜாமியா மில்லியா இஸ்லாமியா
முனைவர், எஸ்.ஓ.ஏ.எஸ், இலண்டன் பல்கலைக்கழகம் [2]
பணிஇயக்குநர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட அறிஞர்
செயற்பாட்டுக்
காலம்
2007-தற்போது
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஜிந்தா பாக்
வாழ்க்கைத்
துணை
மசார் சைதி

மீனு கவுர் (Meenu Gaur) என்பவர் இலண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் பிரித்தானிய-இந்திய இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் ஃபர்ஜாப் நபியுடன் இணைந்து எழுதி இயக்கிய 2013 ஆம் ஆண்டய பாக்கிதிதான் திரைப்படமான ஜிந்தா பாகுக் படத்துக்காக மிகவும் பிரபலமானார். இப்படம் ஆஸ்கார் விருதுகளில் வெளிநாட்டுப் படப் பிரிவில் நுழைந்தது. [3] லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் ஓபன் டோர்ஸ் ஹப் திட்டத்தின் ஆதரவுடன் 'பர்சாக்: பிட்வீன் ஹெவன் அண்ட் ஹெல்' என்ற பெயரிலான படத்தில் இவர் தற்போது பணிபுரிந்து வருகிறார். [4] [5] அண்மையில், எஸ்.ஓ.ஏ.எஸ், இலண்டன் பல்கலைக்கழகம் தன் பல்கலைக்கழகத்தின் குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்களைக் கொண்டாடும் வகையில் அதன் ஒரு பகுதியாக முன்னாள் மாணவர் தொடரின் ஒரு பகுதியாக கல்வி நிலையத்தின் சுவர்களில் இவரது உருவப்படத்தை அமைத்தது. [6]

ஜிந்தா பாக்[தொகு]

2013 இல் மட்டீலா பிலிம்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ஜிந்தா பாக் என்ற பாகிக்கிதான் திரைப்படத்தை மீனு இணைந்து இயக்கினார். பாக்கித்தான் திரைத்துறையை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக, பாக்கித்தானிய திரைப்பட இயக்குனர்களிடமிருந்தும், விமர்சகர்களிடமிருந்தும் மகத்தான பாராட்டுகளை மீனு பெற்றார். [1] ஜிந்தா பாக் பாக்கித்தானில் அதிகம் வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது. மேலும் 86வது அகாதமி விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்கான அதிகாரப்பூர்வ தேர்வு உட்பட பல பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றது. [3] [7] இருப்பினும் இறுதிச் சுற்று போட்டியில் இருந்து வெளியேறியது. [8] 1959 இன் தி டே ஷால் டான் மற்றும் 1963 இன் தி வெயில் ஆகிய படங்களுக்குப் பிறகு, 50 ஆண்டுகளில் ஆஸ்கார் விருதுக்கு சமர்ப்பிக்கப்பட்ட மூன்றாவது பாக்கித்தான் திரைப்படமாக ஜிந்தா பாக் உள்ளது. ஜிந்தா பாக் உலகளவில் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. மேலும் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், பாக்கிஸ்தான் திரையரங்குகளில் வெளியானது. [9] [10] [11] [12] இது பின்னர் 2015 இல் நெட்பிலிக்சில் வெளியானது. [13]

கதில் ஹசீனான் கே நாம்[தொகு]

கதில் ஹசீனான் கே நாம் என்பது ஜீ5 இல் வெளிவந்த ஒரு இந்திய மற்றும் பாக்கித்தானிய குற்றப்புனைவு நாடக அசல் வலைத் தொடராகும். இது பிரித்தானிய-இந்திய இயக்குனர் மீனு கவுரால் உருவாக்கி இயக்கப்பட்டது. இது ஃபர்ஜாத் நபி மற்றும் மீனு கவுர் ஆகியோரால் எழுதப்பட்டது. [14] இந்தத் தொடரை ஹசன் ராசா அபிடி மற்றும் ஷைல்ஜா கெஜ்ரிவால் தயாரித்துள்ளனர். இந்த ஆறு அத்தியாய வலைத் தொடர் 10 டிசம்பர் 2021 அன்று வெளியானது. அதில் ரூபியா சவுத்ரி, சனம் சயீத், சர்வத் கிலானி, இமான் சுலேமான், ஃபைசா கிலானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

வேர்ல்ட் ஆன் ஃபயர்[தொகு]

2022 ஆம் ஆண்டில், பிபிசியின் வெற்றிபெற்ற நாடகப் படமான வேர்ல்ட் ஆன் ஃபயர் இரண்டாவது பருவத்தின் பாகங்களை மீனு கவுர் இயக்கினார். இரண்டாவது தொடர் 2023 இல் பிபிசி ஒன் மற்றும் பிபிசி ஐபிளேயரில் ஒளிபரப்பப்படும் [15]

மர்டர் இஸ் ஈசி[தொகு]

22, பிப்ரவரி, 2023 அன்று அகதா கிறிஸ்டியின் உன்னதமான புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இவர் மர்டர் இஸ் ஈஸியை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. பிபிசி ஒன் மற்றும் ஐபிளேயருக்காக மம்மத் ஸ்கிரீன் மற்றும் அகதா கிறிஸ்டி லிமிடெட் மற்றும் பிரிட்பாக்ஸ் இன்டர்நேஷனலுடன் இணைந்து தயாரிக்கிறது. [16]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Panaji (28 November 2013). "Pak Directors Congratulate Meenu for her Success". http://www.business-standard.com/article/pti-stories/pak-directors-congratulated-me-for-zinda-bhaag-meenu-gaur-113112800213_1.html. 
  2. "Completed PhD Thesis 2009-2010=SOAS". பார்க்கப்பட்ட நாள் 2013-08-26.
  3. 3.0 3.1 "Pakistan sends official entry to Oscars after 50 years". 5 August 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-08-26.
  4. Naman Ramachandran (2 August 2017). "Locarno: Indian Thespian Naseeruddin Shah in Final Talks for 'Barzakh' (EXCLUSIVE)". பார்க்கப்பட்ட நாள் 8 December 2018.
  5. Louise Tutt (1 August 2017). "Locarno Festival 2017 highlights eight upcoming South Asian projects". பார்க்கப்பட்ட நாள் 8 December 2018.
  6. "SOAS Notable Alumni". பார்க்கப்பட்ட நாள் 2020-04-02.
  7. "The Pakistani Academy Selection committee nominates Zinda Bhaag for Oscar consideration".
  8. "Pakistani film 'Zinda Bhaag' out of Oscar race". 21 December 2013. http://tribune.com.pk/story/648558/pakistani-film-out-of-oscar-race/. 
  9. "Zinda Bhaag to release in the US October 18". 3 October 2013. http://tribune.com.pk/story/612953/zinda-bhaag-to-release-in-the-us/. 
  10. Ahmed, Shoaib (31 August 2013). "'Zinda Bhaag' release delayed". http://www.dawn.com/news/1039547/zinda-bhaag-release-delayed. 
  11. Mahmood, Rafay (30 August 2013). "Did you know?: Zinda Bhaag gets delayed till September 20". http://tribune.com.pk/story/597452/did-you-know-zinda-bhaag-gets-delayed-till-september-20/. 
  12. "Zinda Bhaag coming to the UAE". 29 October 2013. http://gulfnews.com/arts-entertainment/celebrity/pakistani-film-zinda-bhaag-coming-to-the-uae-1.1274674. 
  13. "Zinda Bhaag and Netflix". 4 January 2015. https://www.dawn.com/news/1154633/zinda-bhaag-and-netflix. 
  14. Qatil Haseenaon Ke Naam Season 1 Review: A slow-burning dark thriller with killer ladies from across the border, பார்க்கப்பட்ட நாள் 2021-12-29
  15. "Filming begins on series two of World On Fire". 2022-07-14. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  16. "BBC One and iPlayer announce Murder is Easy, based on the classic novel by Agatha Christie". பார்க்கப்பட்ட நாள் 2023-03-04.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனு_கவுர்&oldid=3889599" இலிருந்து மீள்விக்கப்பட்டது