மிதக்கும் தொடர்வண்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிதக்கும் தொடர்வண்டி என்பது காந்தத்தால் மிதத்தல் தொழில்நுட்பம் மூலம் சக்கரங்களின் உதவியில்லாமல் மிதந்து கொண்டே செல்லக்கூடிய தொடர்வண்டி ஆகும். இது ஊர்ந்து செல்ல ஆரம்பிக்கும் போது இதன் பாகங்கள் அனைத்தும் தரையில் படா. காந்தப்பாதையில் செல்லும் இந்த தொடர்வண்டிகளின் வேகம் மணி நேரத்துக்கு 580 கிலோமீட்டர்களையும் தாண்டிச் செல்ல வல்லது.