மார்ட்டின் லூதர் கிங் நாள்
| மார்ட்டின் லூதர் கிங் நாள் | |
|---|---|
1964இல் மார்ட்டின் லூதர் கிங் |
|
| பொதுப் பெயர் | மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாள் |
| மாற்றுப் பெயர் | எம்எல்கே டே, அருள்திரு முனைவர். மார்ட்டின் லூதர் கிங் இளையவர் நாள் |
| அனுசரிப்பவர்கள் | ஐக்கிய அமெரிக்கா |
| வகை | தேசிய நாள் |
| நாள் | சனவரியின் மூன்றாம் திங்கட்கிழமை |
| 2013 நாள் | [[சனவரி Expression error: Unexpected < operator.]] |
மார்ட்டின் லூதர் கிங் நாள் (Martin Luther King, Jr. Day) அருள்திரு முனைவர் மார்ட்டின் லூதர் கிங் இளையவரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய அமெரிக்காவில் கூட்டமைப்பு அரசு விடுமுறையாக கடைபிடிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் கிங்கின் பிறந்த நாளான சனவரி 15ஐ ஒட்டி வருகின்ற சனவரி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
கிங் அமெரிக்க கூட்டமைப்பு மற்றும் மாநில சட்டங்களில் இனப்பாகுபாடுகளை வெற்றிகரமாக எதிர்த்த ஆப்பிரிக்க-அமெரிக்கரின் குடியுரிமை இயக்கத்தில் அகிம்சை வழியை பரப்பியவராவார். 1968ஆம் ஆண்டில் அவர் கொலைசெய்யப்பட்ட பின்னர் அவரது நினைவாக ஓர் கூட்டமைப்பு விடுமுறை கோரும் இயக்கம் ஏற்பட்டது. 1983ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ரோனால்டு ரேகன் இந்த விடுமுறையைச் சட்டமாக்கினார்[1][2] . 1986ஆம் ஆண்டு சனவரி 20 அன்று முதன்முதலாக கடைபிடிக்கப்பட்டது. துவக்கத்தில் இதனை ஐக்கிய அமெரிக்காவின் சில மாநில அரசுகள் இதே பெயரில் கடைபிடிக்க விரும்பாது மாற்றுப் பெயர்களில்[3] அல்லது பிற விடுமுறைகளுடன் இணைத்து கடைபிடித்தன. 2000ஆம் ஆண்டு முதன்முறையாக ஐக்கிய அமெரிக்காவி அனைத்து 50 மாநிலங்களிலும் அதிகாரபூர்வமாக இந்நாள் கடைபிடிக்கப்பட்டது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Woolley, John T. (November 2, 1983). "Ronald Reagan: Remarks on Signing the Bill Making the Birthday of Martin Luther King, Jr., a National Holiday". The American Presidency Project. மூல முகவரியிலிருந்து January 16, 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் January 16, 2011.
- ↑ வார்ப்புரு:USStatute
- ↑ Petrie, Phil W. (May–June 2000). "The MLK holiday: Branches work to make it work". The New Crisis. பார்த்த நாள் November 12, 2008.
வெளியிணைப்புகள் [தொகு]
- Martin Luther King, Jr. Federal Holiday Commission at the Federal Registe
- Martin Luther King, Jr. Day of Service official government site
- King Holiday and Service Act of 1994 at THOMAS
- Remarks on Signing the King Holiday and Service Act of 1994, President William J. Clinton, The American Presidency Project, August 23, 1994
- Works by or about United States Martin Luther King, Jr. Federal Holiday Commission in libraries (WorldCat catalog)