மார்கரெட் கிவல்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்கரெட் கிவல்சன்
கிவல்சன், 2007
பிறப்புமார்கரெட் காலந்து கிவல்சன்
Margaret Galland Kivelson
1928
வாழிடம்அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைமின்ம இயற்பியல்
பணியிடங்கள்இலாசு ஏஞ்சலீசு கலிபோர்னியா பல்கலைக்கழகம்
மிச்சிகான் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்இராடுகிளிப் கல்லூரி ( இளங்கலை),
இராடுகிளிப் கல்லூரி ( முதுகலை),
இராடுகிளிப் கல்லூரி ( முனைவர் பட்டம்)
ஆய்வேடுஉயர் ஆற்றல் மின்னன்கள் ஒடுக்கக் கதிர்வீச்சு (1957)
ஆய்வு நெறியாளர்யூலியான் சுவிங்கர்[1]
விருதுகள்ஐரோப்பியப் புவியியற்பியல் ஒன்றிய ஆல்ப்வென் பதக்கம் (2005)
அமெரிக்கப் புவியியற்பியல் ஒன்றியப் பிளெமிங் பதக்கம் (2005)
அமெரிக்க வானியல் கழக ஜெரார்டு பி. கியூப்பர் பரிசு (2017)

மார்கரெட் காலந்து கிவல்சன் (Margaret G. Kivelson) (அக்தோபர் 21, 1928) ஓர் அமெரிக்க விண்வெளி அறிவியலாளரும் கோள் அறிவியலாளரும் ஆவார். இவர் இலாசு ஏஞ்சலீசு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியல் துறையின் தகைமைப் பேராசிரியராக உள்ளார். இவர் 2010 இல் இருந்து அண்மைவரை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பதவியில் உள்ளதோடு மிச்சிகான் பல்கலைக்கழகத்திலும் ஆராய்ச்சி அறிவியலாளராகவும் அறிஞராகவும் உள்ளார். இவர் புவி, வியாழன், காரிக்கோள் ஆகியவற்றின் காந்தக்கோளங்களை ஆய்வு செய்கிறார். அண்மையில் இவர் கலீலிய நிலாக்களையும் ஆய்வு செய்கிறார். இவர் எட்டு ஆண்டுகளாக வியாழனின் காந்தக்கோள அளவீடுகளைப் பதிவுசெய்துவரும் கலீலியோ விண்கல இலக்குத் திட்டக் காந்த அளவியின் முதன்மை ஆய்வாளர் ஆவார். இவர் புவியைச் சுற்றிவரும் நாசா-ஈசா கிளசுட்டர் II விண்கலக் கூட்டு இலக்குத் திட்ட காந்த அளவியின் இணை ஆய்வாளரும் ஆவார். இவர் நாசாவின் தெமிசு இலக்குத்திட்ட்த்திலும் இணை ஆய்வாளராக உள்ளார். இவர் காசினி-ஐகன்சு இலக்குத்திட்ட காந்த அளவி ஆய்வுக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். இவர் ஐரோப்பிய முகமையின் வியாழனின் பனிக்கட்டி நிலாத் தேட்டக்கலக் காந்த அளவி ஆய்வுக் குழுவிலும் பங்கேற்கிறார். இவர் 350 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியதோடு பரவலாகப் பயன்பட்டுவரும் விண்வெளி இயற்பியல் நூலின் இணையாசிரியரும் ஆவார் (விண்வெளி இயற்பியலுக்கான அறிமுகம்).[2]

இளமையும் கல்வியும்[தொகு]

வாழ்க்கைப்பணி[தொகு]

அறிவியல் பங்களிப்புகள்[தொகு]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

  • குகன்கீம் ஆய்வுநல்கை (1973–74)[2]
  • இராடுகிளிப் பட்டக் கழகப் பதக்கம் (1983)[3]
  • ஆர்வார்டு பல்கலைக்கழக 350 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர் பதக்கம் (1986)[4]
  • அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழக ஆய்வுநல்கை (1989) [5]
  • அமெரிக்கப் புவியியற்பியல் ஒன்றிய ஆய்வுநல்கை (1992)[6]
  • நாசாவின் குழு சாதனை விருது (1995, 1996)[3]
  • தேசிய அறிவியல் கல்விக்கழக ஆய்வுநல்கை (1999)[2]
  • அமெரிக்கக் கலை, அறிவியல் கல்விக்கழக ஆய்வுநல்கை (1998)[2]
  • அமெரிக்கப் புவியியற்பியல் ஒன்றியப் பிளெமிங் பதக்கம் (2005)[7]
  • ஐரோப்பியப் புவியியற்பியல் ஒன்றிய ஆல்ப்வென் பதக்கம் (2005)[3]
  • அமெரிக்க வானியல் கழக ஜெரார்டு கியூப்பர் பரிசு (2017)[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kivelson, M. G. (2008). "The Rest of the Solar System". Annual Review of Earth and Planetary Sciences 36: 1–32. doi:10.1146/annurev.earth.36.031207.124312. Bibcode: 2008AREPS..36....1K. 
  2. 2.0 2.1 2.2 2.3 "Contributions of 20th Century Women to Physics". Archived from the original on 2013-08-06. பார்க்கப்பட்ட நாள் 2013-09-04.
  3. 3.0 3.1 3.2 "CLaSP mkivelso – Climate and Space Sciences and Engineering at the University of Michigan, College of Engineering". clasp.engin.umich.edu. Archived from the original on 2016-04-27. பார்க்கப்பட்ட நாள் 2016-04-06.
  4. Oakes, Elizabeth (2007). Encyclopedia of World Scientists. Infobase Publishing. pp. 404–405. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781438118826.
  5. "1989 AAAS Fellow". பார்க்கப்பட்ட நாள் 2014-04-10.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "1992 AGU Fellow". பார்க்கப்பட்ட நாள் 2014-04-10.
  7. "2005 John Adam Fleming Medal Winner". பார்க்கப்பட்ட நாள் 2013-09-04.
  8. "2017 Prize Recipients - Division for Planetary Sciences". dps.aas.org (in ஆங்கிலம்).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கரெட்_கிவல்சன்&oldid=3949951" இலிருந்து மீள்விக்கப்பட்டது