மாணிக் பட்டாச்சாரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாணிக் பட்டாச்சாரியா, மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினரும், கல்வியாளரும் ஆவார். 2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் மாணிக் பட்டாச்சாரியா அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு சார்பில் பால்சிப்பரா சட்டமன்றத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார்.[1]சுனில் பட்டாச்சாரியாவின் மகனான மாணிக் பட்டாச்சாரியா ஜோகேஷ் சௌத்திரி சட்டக் கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். பின்னர் மேற்கு வங்காள துவக்கக் கல்வி வாரியத்தின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர்.[2]

ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில்[தொகு]

ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரிணாமூல் காங்கிரசு அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியுடன், மாணிக் பட்டாச்சாரியா தகவல் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, 11 அக்டோபர் 2022 அன்று அமலாக்க இயக்குனரக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணிக்_பட்டாச்சாரியா&oldid=3537954" இலிருந்து மீள்விக்கப்பட்டது