மாக்சுவெல்லின் தக்கை திருகு விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு மின் கடத்தியில் மின்சாரம் பாயும்போது கடத்தியின் அருகாமையில் ஒரு காந்தப் புலம் தோற்று விக்கப்படுகிறது. இந்த காந்தப் புலத்தின் திசையினைக காண மாக்சுவெல்லின் தக்கை திருகு விதி (Maxwell's cork screw law) பயன்படுகிறது.

விதி

வலமாகச் சுழன்று முன்செல்லும் திருகியில், திருகு முனைச் செல்லும் திசையில் மின்சாரம் பாய்வதாகக் கொண்டால், ஒரு புள்ளியில் தோன்றும் காந்தப் புலத்தின் திசை திருகியின் சுழல் திசையால் குறிக்கப்படும்.