மல்லி மஸ்தான் பாபு
மஸ்தான் பாபு மல்லி | |
---|---|
பிறப்பு | 3 செப்டம்பர் 1974 நெல்லூர், ஆந்திர பிரதேசம் |
இறப்பு | 24 மார்ச்சு 2015 நெவடா டெரஸ் குருசிஸ், ஆண்டிஸ் | (அகவை 40)
தேசியம் | இந்தியர் |
கல்வி | பி. டெக்., எம். டெக்., எம். பி. ஏ., |
படித்த கல்வி நிறுவனங்கள் | தேசிய தொழில்நுட்ப கழகம், ஜாம்செட்பூர், ஐஐடி, கரக்பூர் மற்றும் ஐஐஎம், கொல்கத்தா |
பணி | மலை ஏற்ற வீரர் & தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சாளர் |
வலைத்தளம் | |
1stindian7summits.com |
(6,194 m)
(4,810 m)
(5,642 m)
(8,848 m)
(5,895 m)
(6,961 m)
(4,892 m)
(2,228 m)
(4,884 m)
மஸ்தான் பாபு மல்லி (Malli mastan babu, 1974 - 2015), ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். உலகின் முன்னணி மலையேறும் வீரரான இவர், கரக்பூர் ஐஐடி மற்றும் கொல்கத்தா ஐஐஎம் ஆகிய கல்வி நிறுவனங்களில் பயின்றவர்.
2006ஆம் ஆண்டில், 19 சனவரி முதல் 10 சூலை முடிய, 172 நாட்களில் எவரெஸ்ட் சிகரம் உட்பட உலகின் 7 கண்டங்களில் உள்ள மிக உயரமான 7 சிகரங்களின் மீது வேகமாக மலை ஏறியவர் என்ற சாதனையை நிகழ்த்தியவர்[1][2][3] அண்டார்டிகாவில் உள்ள வின்சன் மாசிப் சிகரத்தின் மீது ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றவர்.
ஏழு சிகரங்கள்
[தொகு]2006ஆம் ஆண்டில், 172 நாட்களில் உலகின் ஏழு கண்டங்களில் உள்ள ஏழு கொடுமுடிகளைத் தொட்டவர் என்ற உலக சாதனை படைத்தவர் மல்லி மஸ்தான் பாபு.
கண்டம் | மலை | உயரம் (மீட்டர்கள்) | சிகரத்தை தொட்ட நாள் | கிழமை |
---|---|---|---|---|
அண்டார்டிகா | வின்சன் மாசிப் | 4897 | 19 சனவரி 19 | வியாழன் |
தென் அமெரிக்கா | அக்கோன்காகுவா | 6962 | 17 பெப்ரவரி | வெள்ளி |
ஆப்பிரிக்கா | கிளிமஞ்சாரோ | 5895 | 15 மார்ச் | புதன் |
ஆஸ்திரேலியா | கொஸ்கியஸ்கோ | 2228 | 1 ஏப்ரல் | சனி |
ஆசியா | எவரஸ்ட் | 8848 | 21 மே | ஞாயிறு |
ஐரோப்பா | எல்ப்ரஸ் | 5642 | 13 சூன் | செவ்வாய் |
வட அமெரிக்கா | மெக்கின்லி | 6194 | 10 சூலை | திங்கள் |
இறுதி மலை ஏற்றம்
[தொகு]இறுதியாக மல்லி மஸ்தான் பாபு, தென் அமெரிக்காவின், ஆண்டிஸ் மலை ஏற்றத்தின் போது, மார்ச் 24, 2015 அன்று மலையேற்றக் குழுவிலிருந்து காணாமல் போனார்[4][5]. அவரது நண்பர்களும் நலம் விரும்பிகளும் மேற்கொண்ட முயற்சியால், 11 நாட்களுக்குப்பின் ஏப்ரல் 4, 2015 அன்று அவர் இறந்து போனது கண்டுபிடிக்கப்பட்டு அச்செய்தி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தினாலும் உறுதி செய்யப்பட்டது.[6][7]
இதனையும் காண்க
[தொகு]- ஏழு கொடுமுடிகள்
- குலாம் ரசூல் கல்வான்
- டஷி நுங்ஷி மாலிக்
- மாலவத் பூர்ணா
- ஏழு கொடுமுடிகள்
- குலாம் ரசூல் கல்வான்
- டஷி நுங்ஷி மாலிக்
- மாலவத் பூர்ணா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ `Mountain man' creates new climbing record
- ↑ Savour the splendor
- ↑ "Top of the WORLD". Archived from the original on 2014-09-29. பார்க்கப்பட்ட நாள் 2015-04-04.
- ↑ Ace Indian mountaineer Malli Mastan Babu found dead[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Malli Mastan Babu Death - Indian mountaineer - Exclusive – 2015
- ↑ Malli Mastan Babu, Mountaineer, Found Dead in Argentina After 11 Days, என்டிடிவி, நாள்: ஏப்ரல் 4, 2015
- ↑ காணாமல்போன இந்திய மலையேற்ற வீரர் சடலமாக மீட்பு