மல்லப்பாடி பாறை ஓவியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மல்லபாடி பாறை ஓவியங்கள் தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் பர்கூருக்கு அருகில் உள்ள மல்லபாடி என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாறை ஓவியங்கள் ஆகும். தமிழ்நாட்டில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் பழங்கால பாறையோவியம் ஆகும்.[1] சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லியல் துறையினர் 1978இல் இதைக் கண்டுபிடித்தனர்.[2] இப்பாறை ஓவியங்களில், குதிரை மற்றும் மனித உருவங்கள் காணப்படுகின்றன.

மல்லபாடி சிற்றூருக்கு கிழக்கே வண்ணான் கெவி, இருளன் கெவி என்று உள்ளுர் மக்களால் அழைக்கப்படும் இயற்கையான மலைக் குகையில் இந்த ஓவியங்கள் உள்ளன.[3]

இவை வெள்ளை நிறத்திலான ஓவியங்கள். கோடுகளால் வரையப்பட்ட முதல் ஓவியத்தில் மனிதர்கள் குதிரைகளின் மீது அமர்ந்தபடி ஆயுதங்களுடன் போர் புரிவது போன்று தீட்டப்பட்டுள்ளது.[4] இந்த முதல் ஒவியக் காட்சி வேட்டைக் காட்சி என்று கருதுபவர் உள்ளர். இரு குதிரைகளில் அமர்ந்துள்ள இரு வீரர்களும் ஒரு கையில் கடிவாளத்தையும் மறுகையில் ஈட்டி அல்லது நீண்ட கோலை ஆயுதமாக ஏந்தியுள்ளனர். இந்த இரு வீரர்களும் எதிர் எதிர் திசையில் உள்ளனர். [3]

இரண்டாவது ஓவியம் குதிரை வீரர்கள் உள்ள முதல் ஓவியத்துக்கு அடுத்து உள்ளது. அதல் வீரன் ஒருவன் ஒருகையினால் ஒரு வாளை உயர்த்தியபடி இருக்க, அதேசமயம் மற்றோரு கையும் முதல் கையிக்கு இணையாக உயர்த்திய நிலையில் தீட்டபட்டு உள்ளது. இதில் காணப்படும் வீரன் புதர்போன்ற ஆடையை இடுப்பில் அணிந்துள்ளான். மூன்றாவது ஓவியம் தெளிவற்று உள்ளது.[3]

காலம்[தொகு]

இவ்விடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள், இக்களம் பெருங்கற்காலப் பண்பாட்டுக்கு உரியது எனக் காட்டுகின்றன. இந்த ஓவியத்தின் நிறமும் இதே முடிவுக்கே இட்டுச் செல்கிறது என இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையைச் சேர்ந்த தயாளன் கூறுகிறார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. ச. செல்வராஜ், பெருங் கற்படைக் காலம் (இரும்பு காலம் முதல் சங்ககாலம் வரை-4, கட்டுரை, தினமணி 11, திசம்பர், 2015
  2. The discovery of rock art, dating back to 2000 B.C., in Tamil Nadu offers a peek into history
  3. 3.0 3.1 3.2 த. பார்திபன், தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு பகுதி-II சங்க காலம். ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறகட்டளை, தருமபுரி. 2010 ஏப்ரல். பக். 149-150. 
  4. Dayalan, D., Rock Art in Tamil Nadu and its Archaeological Perspective, p. 5.
  5. Dayalan, D., Rock Art in Tamil Nadu and its Archaeological Perspective, p. 8,9.

உசாத்துணைகள்[தொகு]

  • பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]