மரியா சூறாவளி நினைவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரியா சூறாவளி நினைவகம் (Hurricane Maria Memorial) அமெரிக்காவின் புவேர்ட்டோ ரிக்கோவை 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று தாக்கிய மரியா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவிப்பதற்காக நியூயார்க் நகரத்தில் உள்ள பேட்டரி பூங்காவில் சூறாவளி மரியா நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

புவேர்ட்டோ ரிக்கோ தீவின் மீது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கிய மரியா சூறாவளி நான்காம் வகை என்று அடையாளப்படுத்தப்படும் சூறாவளி வகையாகும்.[1] 3,000 பேருக்கு மேல் இறந்ததாக மதிப்பிடப்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை இறுதிவரை முழுமையாகத் தீர்மானிக்கப்படவில்லை.[2][3]

நியூயார்க் நகரத்தில் புவேர்ட்டோ ரிக்கோ வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், சூறாவளியில் இறந்தவர்களின் நினைவாக ஒரு நினைவுச்சின்னம் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.[4]

மரியா சூறாவளி நினைவகம் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று நியூயார்க் மாநில கவர்னர் ஆண்ட்ரூ கியூமோவால் அர்ப்பணிக்கப்பட்டது[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2017 Atlantic Hurricane Season". www.nhc.noaa.gov. பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
  2. "New project to probe Hurricane Maria deaths in Puerto Rico". AP NEWS. 2020-09-09. பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
  3. "2 Years After Hurricane Maria Hit Puerto Rico, The Exact Death Toll Remains Unknown" (in en). https://www.npr.org/2019/09/24/763958799/2-years-after-hurricane-maria-hit-puerto-rico-the-exact-death-toll-remains-unkno. 
  4. Stamp, Elizabeth (26 March 2020). "The Memorial for Hurricane Maria Has Been Revealed". Architectural Digest (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
  5. "Governor Cuomo Unveils Hurricane Maria Memorial Honoring the Puerto Rican Community". Pressroom: Official news from the Office of the Governor New York State (in ஆங்கிலம்). 2021-03-26. Archived from the original on 2021-03-26. பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
  6. WABC (2021-03-27). "New New York City memorial honors Puerto Rican victims of Hurricane Maria". ABC7 New York (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_சூறாவளி_நினைவகம்&oldid=3448104" இலிருந்து மீள்விக்கப்பட்டது