மமூனா ஆசுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மமூனா ஆசுமி
Mamoona Hashmi
உறுப்பினர்-பாக்கித்தான் தேசிய சட்டமன்றம்
பதவியில்
2002–2012
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்பாக்கித்தானியர்
பெற்றோர்
  • ஜாவித் ஆசுமி (father)

மமூனா ஆசுமி (ஆங்கிலம்: Mamoona Hashmi; உருது: میمونہ ہاشمی ) என்பவர் பாக்கித்தான் அரசியல்வாதி ஆவார். இவர் பாக்கித்தானின் தேசிய சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

2002ஆம் ஆண்டு பாக்கித்தான் பொதுத் தேர்தலில் பஞ்சாபிலிருந்து பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பாக்கித்தான் முஸ்லீம் லீக் வேட்பாளராகப் போட்டியிட்டு மமூனா ஆசுமி பாக்கித்தானின் தேசிய சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

2008ஆம் ஆண்டு பாக்கித்தான் பொதுத் தேர்தலில் பஞ்சாபிலிருந்து பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பாக்கித்தான் முஸ்லீம் லீக் வேட்பாளராக பாக்கித்தானின் தேசிய சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5] பாக்கித்தான் தெஹ்ரீக்-எ-இன்சாப் கட்சியில் சேர்ந்த பிறகு 2012-ல் இவர் தனது தேசிய சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

மமூனா ஆசுமி அரசியல்வாதியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜாவேத் ஆசுமிக்கு மகளாகப் பிறந்தவர் ஆவார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Report, Bureau (25 December 2003). "HYDERABAD: Struggle to end army's role in politics urged". DAWN.COM. https://www.dawn.com/news/131064. பார்த்த நாள்: 9 December 2017. 
  2. "Triangular battle for Multan district seats". DAWN.COM. 7 October 2002. https://www.dawn.com/news/60517. பார்த்த நாள்: 9 December 2017. 
  3. 3.0 3.1 3.2 Reporter, The Newspaper's Staff (5 January 2012). "Resignation of six MNAs accepted". DAWN.COM. https://www.dawn.com/news/685744. பார்த்த நாள்: 9 December 2017. 
  4. Wasim, Amir (16 March 2008). "60pc new faces to enter NA". DAWN.COM. https://www.dawn.com/news/293912. பார்த்த நாள்: 9 December 2017. 
  5. Asghar, Raja (30 December 2011). "Javed Hashmi's 'double blow' in NA". DAWN.COM. https://www.dawn.com/news/684140. பார்த்த நாள்: 9 December 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மமூனா_ஆசுமி&oldid=3684666" இலிருந்து மீள்விக்கப்பட்டது