மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"பேரூர் கொண்ட ஆர்கலி விழவு" - படம் இக்கால விழா

மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 223.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

பிரிவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி தேற்றுகிறாள். மனம் தேறுதல் பெறாத கிழத்தி தோழிக்குச் சொல்கிறாள்.

பேரூர் கொண்டாடும் திருவிழாவுக்குச் சென்றுவரலாம் என்கிறாய். அங்கு நல்லவர்கள் பலர் இருப்பார்கள் என்பது உண்மைதான். தாய் அன்று தழல், தட்டை, முறி ஆகியவற்றைத் தந்து தினைப்புனம் காக்க அனுப்பிவைத்தாளே அங்கே என் நலத்தையெல்லாம் உண்டு எடுத்துக்கொண்டு சென்றானே ஒருவன் அவன் இருப்பானா? - என்கிறாள் கிழத்தி.