மதுகர் நர்கர் சந்துர்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுகர் நர்கர் சந்துர்கர் (Madhukar Narhar Chandurkar)(14 மார்ச் 1926 - 28 பிப்ரவரி 2004) என்பவர் பம்பாய் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.[1][2]

கல்வி[தொகு]

சந்துர்கர் 1926-ல் பிறந்தார். இவர் நாக்பூரில் உள்ள சோமல்வார் அகதமி மற்றும் ஹிசுலாப் கல்லூரியில் படித்தார். பின்னர் இவர் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து தேர்ச்சி பெற்றார். சந்துர்கர் வழக்கறிஞராகப் பதிவுசெய்து 1954-ல் நாக்பூர் உயர் நீதிமன்றத்தில் உரிமையியல், குற்றவியல் மற்றும் வரி விடயங்களில் பயிற்சியைத் தொடங்கினார்.

நீதிபதி பணி[தொகு]

இவர் 28 அக்டோபர் 1967 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி பதவியில் நியமிக்கப்பட்டார். 1968ல் நிரந்தர நீதிபதியானார். நீதிபதி சந்துர்கர் 2, சனவரி 1984-ல் பம்பாய் உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.[3] பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதியாக ஏப்ரல் 2, 1984ஆம் ஆண்டு மாற்றப்பட்டார். இங்கு இவர் 13, மார்ச் 1988 வரை பணியிலிருந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Full Court Conference" (PDF). பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.
  2. Chandrachud, Abhinav (19 May 2018). "The right man for the job". The Indian Express. https://indianexpress.com/article/lifestyle/books/the-right-man-for-the-job/. 
  3. "MR. M.N. Chandurkar". பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.
  4. "The former Chief Justices". பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.