மதுகர்ராவ் சவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுகர்ராவ் சவான் (Madhukarrao Chavan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 5ஆவது முறையாக இவர் மகாராட்டிரா மாநிலத்தின் சட்டப் பேரவையில் சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். மகாராட்டிர அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறையின் அமைச்சராக இருந்தார்.[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவரான இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராட்டிர மாநில பொதுத் தேர்தல்களில் ஒசுமானாபாத் மாவட்டத்தில் உள்ள துல்சாப்பூர் விதான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.[2]

துல்சாப்பூர் தாலுகாவின் ஆந்தூரில் மதுகர்ராவ் சவான் வசித்தார். பல கூட்டுறவு, கல்வி நிறுவனங்களின் தலைவராகச் செயல்பட்டார். 1985 ஆம் ஆண்டிலிருந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். 1985 ஆம் ஆண்டில் பத்மசிங் பாட்டீலிடம் உசுமானாபாத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால் 1990 ஆம் ஆண்டில் துல்சாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் 1995 ஆம் ஆண்டில் மாணிக்ராவ் கபாலிடம் தோற்றார். 1999 ஆம் ஆண்டு முதல், துல்சாப்பூர் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை 1999, 2004, 2009, 2014 ஆம் ஆண்டுகளில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Madhukar Chavan elected Maharashtra Assembly deputy speaker". Daily News and Analysis. 10 December 2009. http://www.dnaindia.com/mumbai/report_madhukar-chavan-elected-maharashtra-assembly-deputy-speaker_1322273. பார்த்த நாள்: 11 November 2010. 
  2. "Maharashtra Assembly Election 2009 -Results" (PDF). Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original (PDF) on 22 November 2009. பார்க்கப்பட்ட நாள் 11 November 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுகர்ராவ்_சவான்&oldid=3805630" இலிருந்து மீள்விக்கப்பட்டது