மதன்–ஹரிணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதன்-ஹரிணி
பணிதிரைப்பட நடன இயக்குனர்கள்
செயற்பாட்டுக்
காலம்
1989 ம் ஆண்டு முதல்
Career
Dancesஇந்தியப் பாரம்பரிய நடனங்கள்

மதன்-ஹரிணி என்போர் கன்னடம் மற்றும் துளு திரைப்படங்களில் நடன இயக்குநர்களாக பணிபுரியும் மதன் மற்றும் ஹரிணி ஆகியோரைக் கொண்ட இணையாகும். [1] இவ்விருவரும் இணைந்து இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனங்களை வடிவமைத்துள்ளார்கள். அத்துறையில் இந்த இணை சிறப்பானதாக கருதப்படுகிறது. [2]

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

கர்நாடக மாநிலம் புத்தூரில் வசித்து வந்த மதன் மற்றும் ஹரிணி இருவரும் வேலைவாய்ப்புக்காக பெங்களூரு வந்து அங்கு ராஜரத்தினம் பிள்ளையிடம் இந்திய பாரம்பரிய நடனத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் இணைந்து ஆர்யாம்பா பட்டாபியின் நாதஸ்வரூபி திரைப்படத்தில் நடன இயக்குநர்களாக முதன்முறையாகப் பணியாற்றினார்கள். அத்தோடு அமெரிக்கா அமெரிக்கா (1995), ஹூமலே (1998), சிங்காரவ்வா (2003), காலிபட்டா (2008), போன்ற கன்னடப் படங்களிலும் துளு படங்களான பங்கார்டா குரல் (2012) மற்றும் ரிக்சா டிரைவர் (2013) போன்றவற்றிலும் இணைந்து பணியாற்றி, நடனங்களைச் சிறப்பாக வடிவமைத்து பெயர் பெற்றுள்ளனர்.

திரைப்படங்கள்[தொகு]

  • அமெரிக்கா அமெரிக்கா (1995)
  • அக்கா (1997)
  • ஹூமலே (1998)
  • நீலா (2001)
  • சிங்காரவ்வா (2003)
  • ப்ரீத்தி பிரேமா பிரணயா (2003)
  • காலிபடா (2008)
  • ஆட்டோ (2009)
  • கல்கெஜ்ஜே (2011)
  • காரணிகா ஷிஷு (2012)
  • பங்கார்டா குரல் (2012)
  • ரிக்சா டிரைவர் (2013)
  • ஸ்வீட்டி நன்னா ஜோடி (2013)
  • அம்பரீஷா (2014)
  • த்ரிஷ்யா (2014)
  • சூம்பே (2015)
  • மைத்ரி (2015)
  • சூப்பர் மர்மயே (2015)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Madan-Harini - Magicians of dance floor". Viggy.com. பார்க்கப்பட்ட நாள் 5 October 2015.
  2. "Madan-Harini join the union". http://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/Madan-Harini-join-the-union/articleshow/20699316.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதன்–ஹரிணி&oldid=3681355" இலிருந்து மீள்விக்கப்பட்டது