மண் வீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவில் படப்பை ஊராட்சி நகருக்கு அருகில் காணப்பட்ட ஒரு மண்குடிசை

மண் வீடு என்பது களிமண்ணை முதன்மையாகப் பயன்படுத்திக் கட்டப்பட்ட வீடு ஆகும். பல்வேறு விதமான மண் வீடுகள் உள்ளன.

இலங்கையில் மண் வீடுகளில் ஒரு வகை சாம்பல் நிறத்தில் நேர்த்தியாகச் சீமெந்தால் கட்டியது போலவே இருக்கும். இவற்றுள் ஒரு வகை வட்ட வடிவமும் கூரை கூம்பு வடிவமும் உடையவை. வேறு ஒரு வகை நீள் சதுரமாகவும் அறைகளுடனும் அமையும். இவை நீரில் இருந்து பாதுகாப்பதற்காக உயர்த்தப்பட்ட ஒர் அடித்தளத்தில் கட்டப்பட்டு இருக்கும். கூரைகள் ஓலையால் வேயப்பட்டு இருக்கும்.

சுவர் அமைப்பு[தொகு]

இலங்கை மட்டக்களப்பு பகுதியில் காணப்பட்ட நிலை கட்டைச் சுவர்- நாணல், களிமண் கொண்டு செய்யப்பட்ட குடிசையும் ஓலைக் குடிசையும்

மண்வீடுகளின் சுவர் அமைப்பு பலவகைப்பட்டதாகக் காணப்படும்.

  • நிலைக் கட்டைச் சுவர் - மரக்கம்புகளை அல்லது மூங்கில், நாணல் கம்புகளை வரிச்சியாக வைத்துக் கட்டி இதன் இடைநடுவை களிமண்ணினால் நரப்பிக் கட்டப்படும். பின் மண்சந்தினால் மெழுகிடப்படும்.
  • கற்சுவர் - சுடப்படாத பச்சைக் கல் பிணைப்பு ஊடகமாக களிமண்ணினால் கட்டப்படும். இதுவும் பூச்சிடப்படும்.

பண்டைய பெரிய கட்டடங்கள் கூட களிமண் கொண்டு கட்டப்பட்டு அவற்றின் உறுதிக்காக சர்க்கரை , தேன் வச்சிரமெழுகு என்பன கலக்கப்பட்ட சாந்தினால் பூசப்பட்டன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்_வீடு&oldid=2549791" இலிருந்து மீள்விக்கப்பட்டது